விடுகதைகள்
1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?
2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?
3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?
6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
7. குட்டி போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?
8. கிளை இல்லா மரம், வெட்ட வெட்ட வளரும். அது என்ன?
9. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
10. ஓட்டுக்குள்ளே வீடு; வீட்டுக்குள்ளே கூடு. அது என்ன?
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
விடை :
1. வெங்காயம்
2.மின்விசிறி
3.பொம்மை
4.தையல்காரர்
5.நிழல்
6.படகு
7.வௌவால்
8.தலைமுடி
9.தண்ணீர்
10.நத்தை