தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 25
மீண்டும் நம் நினைவுக்கு…
Reporting clause என்பது பேசுபவர் பகுதி!
Reported clause என்பது பேசப்பட்ட பகுதி!
போன இதழின் தொடர்ச்சியாக… “மேற்கோள் குறிக்கு’’ வெளியில் உள்ள (இடது பகுதியைத்தான்) ஆய்ந்து கொண்டிருக்கிறோம்.
(கவனிக்கவும்: சொல்லின் இறுதியில் ing என்று சாய்வாக எழுதி பச்சை நிறத்தில் பேசுபவர் பகுதி_யை வடிவமைப்பின் போது கவனிக்கவும் வேறுபடுத்திக் காட்டியுள்ளோம்.)
கண் _ உடலின் உறுப்பு. அந்தக் கண்ணுக்கு இமை ஒரு கிளை உறுப்பு, கருவிழி ஒரு கிளை உறுப்பு, விழிப்படலம் ஒரு கிளை உறுப்பு!
கை உடலின் உறுப்பு என்றால் -_ விரல் ஒரு கிளை உறுப்பு, நகம் ஒரு கிளை உறுப்பு, உள்ளங்கை ஒரு கிளை உறுப்பு… அல்லவா?
அதேபோல, நேர்க்கூற்றும் அயற்கூற்றும் மொழியின் இலக்கணம் எனில், இலக்கணத்திற்கு சில கிளை இலக்கணங்கள் உண்டுதானே?
Reporting Clauseஇன் (பேசுபவர் பகுதியின்) கிளைகள்
1. பேசுபவர் பிரதிப் பெயர்ச் சொல் (Reporting Pronoun)
2. பேசுபவர் வினைச் சொல் (Reporting verb)
போன இதழில் (Reporting Pronoun) பற்றிப் பார்த்தோம்.
இப்போது Reporting verb பற்றிப் பார்ப்போம். அதாவது பேசுபவர் வினைச்சொல்- பற்றி விளங்கிக் கொள்வோம்.
Reporting verb (பேசுபவர் வினைச்சொல்)
முதலில் எளிமையான ஓர் எடுத்துக்காட்டைக் காண்போம்.
இங்குள்ள பேசுபவர் பகுதியில்… He. her போன்ற Reporting Pronouns (என்ற பிரதிப் பெயர்ச் சொற்கள்) பற்றி போன இதழில் தெரிந்து கொண்டோம்.
இப்போது பேசுபவர் பகுதியில்… said to என்ற Reporting verb
(பேசுபவர் வினைச் சொல்) பற்றிப் பார்ப்போம்!
said to என்னும் பதம் நேர்க்கூற்றில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
said to என்றால் (ஒருவர் மற்றொருவரிடம்) சொல்லுதல்.
இந்த said to (சொல்லுதல்) என்னும் பதம் நேர்க்கூற்று உரையாடல் அயற்கூற்றாக மாறும்போது told அல்லது advised அல்லது ordered அல்லது asked அல்லது exclaimed ஆகிய சொற்களாக உரையாடலின் வகைக்கேற்ப மாறும்.
ஏன்?
உரையாடல் சொற்றொடர்களின் தன்மை அப்படி!
சரி,
நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாறும்போது (மாற்றும்போது) said to – உரையாடல் தொடருக்கேற்ப என்னவாக மாறுகிறது?
அட்டவணையைப் பாருங்கள்.
(ஏற்கெனவே சென்ற இதழ்களில் நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றுக்கு மாறுகின்ற பல எடுத்துக்காட்டுகளைப் பார்த்தோம்… அவற்றை ஒரு முறை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்)
Reporting verb (பேசுபவர் வினைச் சொல்)- என்பதைப் புரிந்துகொள்வதற்காக… மீண்டும் 4 விதமான உரையாடல்களைப் பார்ப்போம்.
சாதாரண உரையாடல் (Declarative Statement)
* இயல்பாக அல்லது சாதாரணமாக நடப்பதைச் சொல்லுவது, அல்லது இருப்பதைச் சொல்லுவது சாதாரண உரையாடல்.
* told என்னும் சொல்லைத்தான் அதிகமாக (அயற்கூற்றுக்கு மாறும்) உரையாடல்களில் பயன்படுத்துகிறோம்.
* Told = பகன்றான் / சொன்னான் – சாதாரண உரையாடல்
மேற்கோள் குறியின் இடது புறம் மட்டும் கவனியுங்கள்
கேள்வி/வினா உரையாடல் (Interrogative Sentence)
* வினா எழுப்புதலை (கேள்வி) கேட்டல் மூலம் தானே செய்ய முடியும்? அதாவது asked என்றுதானே ஆங்கிலத்தில் எழுத முடியும்?
(புரிந்து கொள்ளவும்: hear என்றால் காதால் கேட்டல்; ask என்றால் கேள்வி கேட்டல் அதாவது வினா தொடுத்தல்)
Asked = கேள்வி கேட்டல் க கேள்வி / வினா உரையாடல்
கட்டளை உரையாடல் (Imperative Sentence)
* அதேபோல உத்தரவு (கட்டளை/கோரிக்கை/அறிவுரை) இடவேண்டிய சொற்றொடரில் அதாவது: “இதைச் செய்’’… “அதைச் செய்’’ என்று மற்றவர்களைச் செய்யத் தூண்டும் கெஞ்சுதலை அல்லது கட்டளை இடுதலை அல்லது அறிவுரை சொல்லுதலை கட்டளை உரையாடல் என்போம். அந்த உரையாடலுக்கு ordered, advised, warned, requested போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
Ordered = கட்டளை பிறப்பித்தல் க கட்டளை உரையாடல்
உணர்ச்சிப்பூர்வ உரையாடல் (Exclamatory Sentence)
* அதேபோல உரையாடல்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது உரையாடல் எழுதப்படும் விதம் “உணர்வுப்பூர்வமாக அமைய வேண்டுமல்லவா!’’ அதற்கு exclaim என்ற ஆங்கில வார்த்தைதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
Exclaim = வியத்தல்/அதிர்ச்சியாதல் க உணர்ச்சிப்பூர்வ உரையாடல்
இப்போது பேசுபவர் பகுதி (Reporting Clause) நிறைவடைந்தது. அடுத்ததாக (Reported Clause) பேசுகின்ற பகுதி! அதாவது “மேற்கோள் குறிக்குள் உள்ள பகுதி’’ அடுத்த இதழில்…
தொடரும்…