கொம்பில்லாத காண்டாமிருகம்
மூடநம்பிக்கைகள் உலகம் முழுதும் உண்டு. அதிலும் விலங்குகள் குறித்து அதன் உண்மை அறியாமல் பல கட்டுக் கதைகள் உலவுவது பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. இந்தப் பட்டியலில் காண்டாமிருகத்தின் கொம்புகளில் மருத்துவ குணம் உள்ளது என்பதும் ஒன்றாகும். இந்தக் கொம்புகளுக்காக காண்டாமிருகத்தை வேட்டையாடுவது தென் ஆப்ரிக்காவில் தொடர்கதை ஆகிவிட்டது. ஏனென்றால் கள்ளச் சந்தையில் காண்டாமிருகத்தின் கொம்புகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. எனவே, கொம்புகளுக்காக இதுவரை 800 காண்டாமிருகங்களைக் கொன்று குவித்து விட்டார்கள். இந்நிலையில் வேட்டைக்காரர் களிடம் இருந்து காண்டாமிருகத்தைக் காக்க விலங்கியல் மருத்துவ ஆய்வாளர்கள் அதன் கொம்புகளை மட்டும் அறுத்துவிட்டு அதனைக் காடுகளில் விட்டுவிடுகின்றனர். இதனால் இப்போதெல்லாம் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்கள் கொல்வதில்லையாம்.