கண்ணிலும் கவனம் கொள்
சின்னஞ் சிறிய கண்கள்முன்
வண்ண உலகக் காட்சிகள்
என்னின் முன்னே தெரியுதே!
என்ன வியப்பு!? மகிழ்கிறேன்
கண்முன் கண்ட வடிவங்கள் கணத்தில் மூளை பெற்றதும்
கண்கள் காட்சி அறிவினைக் கருத்தில் உணர்ந்து தெளியுமே!
தொலைக்காட்சிப் பெட்டிமுன்
தொலைவில் அமர்ந்து காண்பதால்
தொல்லை கண்ணிற் கில்லையே!
தொடர்ந்தும் காணல் தொல்லையே!
கண்கள் காக்க வேண்டுமே!
கவனம் கொண்டு என்றுமே!
புண்ணும் ஆகும் உள்ளமே,
பொலியும் கண்கள் இல்லையேல்!
என்றும் எதிலும் கவனம்கொள்!
ஏற்கும் அறிவை ஆய்ந்து கொள்!
நன்றே நாமும் உயர்ந்திட
நம்மின் பெரியார் உரையைக்கேள்!