அறிவுப் பிஞ்சுகளே
கருப்பு சிவப்புக் கயிற்றினை _ மணிக்
கட்டில் கட்டி வாழ்வாரை (திரிபவரை)
கருத்தும் அறிவும் மிக்கநாம் _ உடன்
கண்டு எதிர்த்து உணர்த்துவோம்!
திருத்தம் மிக்க அறிவுதான் _ நாம்
தேறி விளங்கச் செய்திடும்!
உருத்துகின்ற கயிறுகள் _ நம்
உடலை, உணர்வை ஒடுக்கிடும்!
வருத்தம் இன்றி வாழ்ந்திட _ பலர்
வளர்க்கும் மூடப் பழக்கத்தை,
நெருப்புப் போல எதிர்த்துநில்!_என்றும்
நிலைக்கும் அறிவைப் போற்றிக்கொள்!
தழல் தேன்மொழி _ புதுச்சேரி