டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமேனும் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் முதல்முறையாகக் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் அரை இறுதியில் போராடித் தோல்வியடைந்தது.
ஆட்ட நேர இறுதியில் 4_-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் இந்த பயணம் அத்தனை எளிதாக இல்லை. பல்வேறு சமூகத் தடைகளைத் தாண்டியவர்கள்தான். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் விளையாடிய பெண்கள் அனைவரும்.
இந்திய மகளிர் அணி குருப் ஆட்டங்களைக் கூட தாண்ட மாட்டார்கள் என சில விமர்சனங்கள் எழுந்தன.
தங்களின் ஆணித்தரமான வெற்றிகள் மூலம், அரையிறுதிக்கு முன்னேறிக்காட்டினர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீல் ஹாகுட் என்பவரின் தலைமையில் பயிற்சி பெற்றுத் தான் 36 ஆண்டுகளில் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கலந்து கொள்ளத் தகுதி பெற்றது.
கடந்த அய்ந்து ஆண்டுகளாகத் தான் ஹாக்கி விளையாட்டில் அறிவியல் பூர்வமான முன்னெடுப்புகளால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி நல்ல பல பலன்களைப் பெறத் தொடங்கியுள்ளது. இந்த 16 பேரும் தங்கள் பயணங்களை, தங்களின் தடைகளைத் தாண்டி, ஒரு பொது இலக்கை அடைய வேண்டும் எனப் போராடி, இந்திய பெண்கள் ஹாக்கியை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் அனைவருமே தங்களின் அணிக்காகவும், தங்களின் நெடும் போராட்டக் குணத்துக்காகவும் நிச்சயம் நினைவுகூரப்பட வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
– சரவணா ராஜேந்திரன்