கணக்கு : எண்ணோடு விளையாடு!
அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே!
முந்தைய பெரியார் பிஞ்சுகளில் வந்த எண்ணோடு விளையாடுங்கள் பகுதியைப் படித்தீர்களா? அதில் வருகின்ற வினாக்களுக்குப் பதில் கண்டுபிடித்தீர்களா? அடுத்து மூளைக்கு வேலை கொடுக்கின்ற சில கணக்குகளைத் தருகிறோம். செய்து பார்த்து மகிழுங்கள்.
கீழ்க்கண்ட பெருக்கலில் _ கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.
எண் உருக்களை எழுதும் முறை
அடுத்த விளையாட்டு:-
“நான் எனது உள்ளங்கையில் ஓர் எண்ணை எழுதி வைத்துள்ளேன்.
அது என்ன எண் என்று சொல்ல முடியுமா?’’
என்று கையை மூடிவைத்துக் கொண்டு கேட்டாள் கலையரசி.
“அது எப்படி முடியும்? அந்த எண்ணைப் பற்றி ஏதாவது ஒரு குறிப்பு கொடு’’ என்றாள் சுவாதி.
கலையரசி சொன்ன குறிப்பு, “அதில் இரண்டே எண்கள் மட்டும் உள்ளன.
இரண்டையும் பெருக்கினால் கிடைக்கும் எண்ணைப் போல் இரண்டு மடங்கு
நான் கையில் எழுதி வைத்திருக்கும் எண்ணுக்குச் சமம்.
சுவாதி விடையைக் கண்டுபிடிக்க உங்களால் உதவ முடியுமா?
கணிதப் புதிர் சுடோகு
விடை: அடுத்த இதழில்…
கடந்த இதழ் சுடோகு விடை: