பெரியாரைத் தெரியுமா?
பெரியார் தாத்தா விரும்பிய ஒன்று – கடைப்பிடித்த ஒன்று ‘உண்மை’. தான் தொடங்கிய பத்திரிகைக்கு மட்டுமல்ல; தனது ‘குடிஅரசு’ அச்சகத்தை ஈரோட்டில் 1925இல் நிறுவிய போது அவர் வைத்த பெயர் ‘உண்மை விளக்க அச்சகம்’ என்பதாகும். சிறு வயதிலேயே ஜாதி பேதத்தை எதிர்த்துச் செயல்பட்டவர். மனிதரின் இழி நிலைக்குக் காரணம் ஜாதியே என்பதை உணர்ந்த பெரியார், இறுதி வரை ஜாதி ஒழிப்பு ஒன்றையே தம் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு போராடினார். உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.
– சு.இந்துஜா,
பத்தாம் வகுப்பு,
அரசு உயர்நிலைப் பள்ளி,
பாலாமடை.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் ஜாதி சமயப் பிரிவுகள் மேலோங்கி இருந்தன.
சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச்சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.
சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவி-லேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
– எஸ்.சந்துரு
பத்தாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி,
பாலாமடை.
வாங்கியும் படிக்கலாம்.
https://storyweaver.org.in/
இணையத்தில் இலவசமாகவும்
படிக்கலாம். பல மொழிகளிலும்
புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதே போல் ஏராளமான
தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கின்றன.