அசத்தும் அறிவியல் : தாவரங்கள் எப்படி வேர்கள் மற்றும் தண்டு மூலம் தண்ணீரை உறிஞ்சுகின்றன?
எப்படி பரிசோதனை செய்வது?
ஒவ்வொரு கண்ணாடிக் கோப்பையிலும் குழாயிலிருந்து பிடித்த புதிய நீரை நிரப்பவும். 2–5 சொட்டு உணவு வண்ணத்தை (Food colours) அதில் சேர்க்கவும், ஒவ்வொன்றும் ஒரு வண்ணம். அனைத்து வானவில் வண்ணங்களையும் பெற நீங்கள் கலப்பு வண்ணங்களையும் கலக்கலாம்.
(எ.கா. நீலம் + மஞ்சள் = பச்சை)
உங்கள் கோப்பைகள் அல்லது கண்ணாடிப் புட்டிகளுக்கு ஏற்றவாறு நீங்கள் பூவின் தண்டுகளை வெட்ட வேண்டும்.
ஒவ்வொரு கோப்பை வண்ண நீரிலும் குறைந்தது ஒரு தண்டுடன் கொண்ட மலர் சேர்க்கவும்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பூக்களைச் சரிபார்த்து ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.
அறிவியல் விளக்கம்:
பெரும்பாலான தாவரங்கள் அவற்றின் வேர்கள் மூலம் தரையிலிருந்து தண்ணீரைக் “குடிக்கின்றன”.
தண்ணீர் தாவரத்தின் தண்டுகள் மூலம் இலைகள் மற்றும் பூக்களுக்குச் சென்று உணவு உண்டாக்குகிறது மற்றும் செடியை கடினமாக வைக்க உதவுகிறது.
ஒரு பூ அதன் செடியிலிருந்து வெட்டப்படும் போது, அதன் வேர்கள் இல்லை என்றால் கூட; பூவின் தண்டு இன்னும் தண்ணீரை “குடிக்கிறது”, இலைகள் மற்றும் பூக்களுக்கு வழங்குகிறது. இது எப்படி நடக்கிறது?
தாவரங்களின் தண்டுகள் வழியாக இரண்டு வழிகளில் நீர் உறிஞ்சப்படுகிறது. டிரான்ஸ்பிரேஷன் (ஆவியுயிர்ப்பு) (Transpiration) மற்றும் ஒத்திசைவு (Cohesion).
இலைகள், மொட்டுகள் மற்றும் இதழ்கள் (டிரான்ஸ்பிரேஷன்) ஆகியவற்றிலிருந்து ஆவியாகும் நீர் தாவரத்தின் தண்டுக்கு மேல் நீரை இழுக்கிறது.
(நீங்கள் ஓர் உறிஞ்சும் குழாய் (Straw) வைத்து உறிஞ்சுவதுபோல இது வேலை செய்கிறது.) இலைகளிலிருந்து ஆவியாகும் நீர், அதன் பின்னால் இருக்கும் மற்ற நீர் மூலக்கூறுகளை “இழுத்து” விட்டு, அது விட்டுச் சென்ற இடத்தை நிரப்புகிறது. உறிஞ்சும் வாய்க்குப் பதிலாக, அது ஆவியாகும் நீரால் ஏற்படுகிறது. தண்ணீர் தன்னோடு ஒட்டிக்கொள்வதாலும் (ஒத்திசைவு) தாவரத் தண்டுகளில் உள்ள குழாய்கள் மிகச் சிறியதாக இருப்பதாலும் இது நிகழலாம். சிறிய குழாய்கள் வழியாக நடைபெறும் இந்த நீர் செயல்முறை “தந்துகி நடவடிக்கை அல்லது நுண்புழைச் செயல்” என்று அழைக்கப்படுகிறது.
விளைவு:
வண்ணத்துடன் நீர் தண்டுக்குள் நுழையும் போது மலர்களில் நிறங்கள் நிறைந்திருப்பதை நாம் காணலாம்.