பெரியார் திடலின் தாக்கம்!
இன்று காலையில் பால் கொதிக்க வைத்துக் கொண்டிருந்த போது பால் பொங்கி சிறிது சிந்தி விட்டது, இதற்கு அவர்கள் பாட்டி கிருஷ்ணவேணி நடராஜன், “பால் கொட்டும் வரைக்கும் அவ்வளவு கவனக்குறைவா இருப்பதா” என்று சத்தம் போட்டுள்ளார்.
அதற்கு எனது மூத்த மகள் கிருபா, “பொங்கல் அன்று பால் பொங்கி எந்தப் பக்கம் விழுகிறது என்று காத்திருந்து பார்த்து குலவை போட்டு நல்லது நடக்கும் என்று எல்லாம் சொல்கிறீர்கள். மற்ற நாளில் பால் பொங்கி விழுந்தால் ஏன் கத்துகிறீர்கள்?’’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு என் மனைவி நந்தினி, “பெரியார் திடல் காற்று உன்னையும் பிடித்துகொண்டது. நீயும் பேசக் கற்றுகொண்டாய்!’’ என்றார்.
– சரவணா,
சென்னை.