எலி ராஜ்யம்!
வாங்கோ வாங்கோ எலியாரே…
வளையில் வாழும் எலியாரே!
பாங்காய் ஓடும் எலியாரே…
பதற்றம் ஏனோ எலியாரே?
குற்றம் ஏதும் புரிந்தீரோ?
குதித்துக் குதித்தே ஓடுகிறீர்;
புற்றில் புகுந்து மறுமுறையும்
பூமியை நோக்கித் திரும்புகிறீர்!
பண்டம் யாவும் பதுக்குகிறீர்…
பாழாய்ப் பொந்தில் ஒதுக்குகிறீர்…
குண்டுச் சட்டிப் பானைகளை
கவிழ்த்துச் சாய்த்தே நொறுக்குகிறீர்!
சேதம் உம்மால் ஏராளம்…
‘செல்லம்’ உமக்குத் தாராளம்…
மீதம் அனைத்தும் உம்(கு)கையில்
மிஞ்சும் வேதனை எம் நெஞ்சில்!
– ச.ஆ.கேசவன்
இனாம்மணியாச்சி