உலகு சூழ் ஆழி – மு.நீ.சிவராசன்
அண்டார்டிகா:- (Antartica)
பூமியின் தெற்கே தென்துருவத்தைச் சுற்றி உள்ள பெரும் நிலப்பரப்பு அண்டார்டிகா ஆகும். அந்நிலப் பகுதி எப்பொழுதும் கடும் காற்று வீசிக்கொண்டிருக்கின்ற மிகக் குளிரான பகுதி ஆகும். அந்நிலத்தை 7 நாடுகள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டு உரிமை கொண்டாடின. ஆனால் 1959 இல் ஏற்பட்ட அண்டார்டிகா ஒப்பந்தத்தினால் இந்த உரிமை நீக்கப்பட்டது. இப்பகுதி உலக அமைதிக்காக பயன்படுத்தப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு வாழ்வோர் அங்கு உள்ள ஆய்வுக்கூடங்களில் பணியாற்ற வந்து செல்லும் அறிவியல் அறிஞர்கள் ஆவர்.
இயற்கைக் கூறுகள்: அண்டார்டிகாவின் பெரும் பகுதி பனிப்படலத்தால் மூடப்பட்டிருக்கும். சில இடங்களில் பனிப் படலத்தின் ஆழம் 4.8. கி.மீ. (3 மைல்கள்) இருக்கும். பூமியின் 90 விழுக்காடு பனிக்கட்டிகள் இங்குதான் உள்ளது. உலகின் 80 விழுக்காடு தூயநீர் இங்குதான் உள்ளது.
பரப்பு: 13,900 3002 சதுரகி.மீ. மக்கள் தொகை 4000 – பன்னாட்டு ஆய்வாளர்கள், உயரமான இடம், வின்சென் மேஷிப் (Vinson Massif) 5,140 மீ. சராசரி மூடியுள்ள பனியின் கனம் 2,450 மீ.
பனிப்பாறைகள்: (Ice Bergs)
மிகப்பெரிய பனிப்பாறை 200 கி.மீ. நீளமானது. பனிப்பாறைகள் வடக்கு நோக்கி நகர்வதால் அவைகள் உடைந்து உருகுகின்றன. பனிப்பாறைகளின் 3 இல் (பகுதியே தண்ணீருக்கு மேல் தெரியும். இங்கு ராஸ் தீவில் (Ross Island) ஏரெபஸ் (Mount Erebus) என்ற எரிமலையும் உண்டு.
சுற்றுலா:
ஒவ்வொரு ஆண்டும் 9,000 மக்கள் அண்டார்டிகாவின் கடற்கரையும், அங்கு வாழும் உயிரினங்களையும் பார்க்க சென்று வருகின்றனர். அவர்கள் அரிதில் கடத்தில் பொருள்களால் (Insulated) ஆன உடையை அணிவர். அவர்கள் கண் கூசும் ஒளி, பனிக்காற்று, தூசு ஆகியவற்றில் இருந்து தம் கண்களைப் பாதுகாக்க ஏற்ற கண்ணாடிகளை அணிவர்.
அண்டார்டிகாவின் பனிப் படுகை:_ அண்டார்டிகா நிலம் தாழ்வானதாக இருந்தாலும் அதன் மீது சாராசரியாக 2100 மீ (6900 அடி) உயரம் பனி படர்ந்துள்ளது. இப்பனிப் படிவு கடந்த 1 இலட்சம் ஆண்டுகளாக அதன் மீது படிந்துள்ளது.