கண்டுபிடித்தது எப்படி?
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
ஒரு காவல்துறை அதிகாரி தனது வாகனத்தில் அந்தச் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் உள்ளே இருந்து “முனுசாமி என்னைக் குத்தாதே…என்னைக் கொல்லாதே…என்ற அலறல் சத்தம் கேட்டது.உடனே அந்தக் காவல் அதிகாரி அந்த வீட்டினுள் சென்று பார்த்தார்.அங்கே ஒரு மருத்துவர், ஒரு வழக்குரைஞர்,ஒரு பொறியாளர் ஆகிய மூன்று பேர்கள் நின்றிருந்தனர். கீழே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதைப் பார்த்த காவல் அதிகாரி உடனடியாக வழக்குரைஞரைக் கைது செய்தார்.
வழக்குரைஞர்தான் கொலை செய்திருப்பார் என்று காவல் அதிகாரி எப்படிக் கண்டுபிடித்தார்?
இப்படி ஓர் குழந்தை
காலை 7 மணிக்கு 20 ரொட்டிகள்- 12 வாழைப்பழங்கள், 9.30 மணிக்கு இரண்டு தட்டு நிறைய சோறு 5 முட்டைகள்,11.30 மணிக்கு 15 ரொட்டிகள்-10 வாழைப்பழங்கள்-2 பாக்கட் சோளப்பொறி,மதியம் 2 மணிக்கு 2 தட்டு சோறு-உருளைக்கிழங்கு மற்றும் மீன் குழம்பு-, 2 ஆம்லெட், மாலை 5 மணிக்கு மீண்டும் 15 ரொட்டிகள், -10 வாழைப்பழங்கள்-2 பாக்கட் சோளப்பொறியுடன் அய்ஸ் கிரீம் மற்றும் பழங்கள், இரவு 8 மணிக்கு 2 தட்டு சோறு, -உருளைக்கிழங்கு மற்றும் மீன் குழம்புடன் ஒரு டம்ளர் தக்காளி சூப்-இது தினந்தோறும் இந்தக் குழந்தை சாப்பிடும் உணவு. இப்ப்டிச் சாப்பிடும் அந்தக் குழந்தை எப்படி இருக்கும்? 33ஆம் பக்கம் வாருங்கள்…
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
விடை:
ஏனென்றால் அந்த வீட்டினுள் நின்று கொண்டிருந்த மருத்துவரும், பொறியாளரும் பெண்கள். வழக்குரைஞர் தான் அங்கு இருந்த ஒரே ஆண். செத்தவர் முனுசாமி… என்று தானே கத்தினார்.