சேதி தெரியுமா?
1. மேற்கு வங்காளத்தில் அண்மையில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியின் பெயர் என்ன?அதன் சார்பில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் யார்?
2. அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முதலமைச்சரின் பெயர் என்ன?அவர் எந்த மாநிலத்தின் முதலமைச்சர்?
3. இந்த ஆண்டு + 2 தேர்வில் எத்தனை சதவீதம் மாணவ,மாணவியர் தேர்ச்சி பெற்றனர்?
4.சில நாட்களுக்கு முன் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட சர்வதேச பயங்கரவாதியின் பெயர் என்ன?அமெரிக்க ராணுவம் சர்வதேச சட்டங்களைப் புறந்தள்ளி எந்த நாட்டில் அத்துமீறி நுழைந்து இந்தக் கொலையைச் செய்தது?
5. மனித உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை அண்மையில் கேரள அரசு தடை செய்தது.அந்த மருந்தை இந்தியா முழுதும் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.அந்த மருந்து எது?
பதில்கள் :
1. திரிணமூல் காங்கிரஸ் -மம்தா பானர்ஜி
2. டோர்ஜி காந்து -அருணாச்சலப் பிரதேசம்
3. 85.9% தேர்ச்சி அடைந்தனர்.
4. பின்லேடன் – பாகிஸ்தான்
5. எண்டோ சல்பான்