உலக நாடுகள் : ஸ்பெயின்(SPAIN)
கருந்துளை (Black Hole) அதிக ஈர்ப்பு விசை கொண்டது. இதனைக் கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதைக்கூட தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது. விண்வெளியில் உள்ள தொலைநோக்கி மூலம் கருந்துளை எங்கே இருக்கிறது என்பதையும் அறிய முடியும். அண்மையில் (7.3.2022) ஸ்பெயினின் வானியற்பியல் பேராசிரியர் ஸ்வெட்லானா பெர்டியுகினா (Svetlana Berdyugina) அவர்கள் முதன்முறையாக புதிய கருந்துளையின் வேகத்தை நம்பகத்தன்மையுடனும் ஆதாரபூர்வமாகவும் உறுதி செய்துள்ளார்.
சூரியனையே தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது இந்தக் கருந்துளை. சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரியதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் சுழற்சி என்பது சுற்றுப் பாதையின் அச்சைப் பொறுத்து, 40 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது என்கிற கண்டுபிடிப்பின் மூலம் உலக அறிவியலர்களை-யெல்லாம் தன் பக்கம் பார்க்க வைத்துள்ளது ஸ்பெயின் நாடு.
அந்த நாட்டின் வரலாற்றையும், பண்புகளையும் பார்ப்போம். இன்னொரு கூடுதல் சிறப்பான செய்தி என்னவென்றால், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் (Rafael Nadal) 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் பெற்றதன் மூலம் உலகிலேயே 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று சாதனை படைத்துள்ளார் என்பதே! அத்தகைய ஸ்பெயின் நாட்டைப் பற்றி பார்ப்போம் பிஞ்சுகளே!
அமைவிடமும் எல்லையும்:
* தென்மேற்கு அய்ரோப்பாவில் உள்ள நாடு. அய்பீரிய தீபகற்பத்தில் 85 சதவிகிதம்.
* மேற்கில் போர்ச்சுக்கலையும், வடகிழக்கில் ஃபிரான்சையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
* தெற்கே ஜிப்ரால்டரும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் மத்திய தரைக்கடலும், வடமேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல்:
* பரப்பளவு: 505,370 சதுர கிலோ மீட்டர்.
* தலைநகரம்: ரியல் மாட்ரிட்.
* 430 முதல் 36-0 வடக்கு அட்சரேகை மற்றும் 30 கிழக்கு மற்றும் மேற்கு தீர்க்கரேகைக்கும் இடையே அமைந்துள்ளது.
* சராசரி ஆண்டு வெப்பநிலை +140 முதல் +190 குளிர்காலத்தில் +40 முதல் +50 வரை.
* வடகிழக்கில் அய்ரோப்பாவுடன் பைரினீஸ் மலைகளின் முகடு மூலம் இணைக்கப்-படுகிறது.
* கோடையில் சராசரி வெப்பநிலை +290
* காலநிலை மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கோடைக்காலம், மிதமான கோடைக்காலம், ஈரப்பதமான வானிலை.
* தஹோ நதி மிக நீளமானது.
* உயரமான சிகரம் முலாசன் மவுன்ட் 3478 மீட்டர்.
* ‘ஸ்பானியா’ என்னும் சொல் ‘முயல்களின் நிலம்’ எனப் பொருள்படும்.
வரலாறு:
* பண்டைய ஸ்பெயின் செல்ட்ஸ் மற்றும் அய்பீரியன்ஸ் இனங்களின் கலவையின் விளைவாக உருவானது.
* அதனைத் தொடர்ந்து ஃபீனிசியன், கிரேக்கம் மற்றும் கார்தீஜியன் மக்களின் இடப்பெயர்வு நடைபெற்றது.
* கி.மு.208_01 ஆண்டுகளில் பியூனிக் போரின் விளைவாக ரோமானியர்கள் வெற்றி பெற்று நிருவாக அமைப்பில் மாற்றம் செய்தனர்.
* ஸ்பானிஷ் _ ரோமன் லாடிஃபண்ட்டிஸ்டுகள் மற்றும் விசிகோத்திக் இராணுவ பிரபுக்களின் ஒருங்கிணைப்பால் வலுவடைந்தது.
* விசிகோத்திக் ராஜ்யத்தினர் மக்களை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவது கி.மு.589ஆம் ஆண்டுகளில் ஆரம்பமானது.
* 711_18இல் அரேபியர்கள் வெற்றி பெற்று, மக்கள் கலிபாவால் ஆளப்பட்டனர்.
* 758இல் உள்நாட்டுச் சண்டையில் கலிபாவின் அதிகாரத்திலிருந்து விலகி கிரனாடா எமிரேட் உருவாக்கப்பட்டது.
* அரேபியர்களின் கீழ் ஸ்பெயின் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் கலாச்சார ஏற்றத்தை அடைந்தது.
* 8 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை கோர்டோபா கலிபாவின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. பின்னர், நிலப்பிரபுத்துவத்தின் விளைவாக முஸ்லிம் நாடுகளாகப் பிரிந்தது.
* அரேபிய மாநிலங்கள் பலவீனமடைந்து, ஸ்பெய்னியர்களால் நிலங்கள் மீட்கப்பட்டன.
* 1479இல் ஸ்பெயின் ஒரு மாநிலமாகவும் தேசமாகவும் உருவாகத் தொடங்கியது.
* 15-_16ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் அய்ரோப்பாவின் பரந்த பிரதேசங்களைக் கைப்பற்றி, ஏகபோக உரிமையாளராக ஆனது.
* 1565_1609 டச்சுப் புரட்சிக்குப் பின்னர், 1701_14இல் ஸ்பானிஷ் வாரிசுப் போர் மற்றும் ஜிப்ரால்டரின் இழப்புடன் முடிவடைந்தது.
* 19ஆம் நூற்றாண்டில் ‘நெப்போலியன் வார்ஸ்’ (1807_14) அமெரிக்கக் காலனிகளின் சுதந்திரத்திற்கான போராட்டம் (1810_26) 1898ஆம் ஆண்டு ஸ்பெயின் _ அமெரிக்கப் போரில் ஸ்பெயின் தோல்வி அடைந்தது.
* உள்நாட்டுப் போரால் 1923_29இல் இராணுவ தளபதி ப்ரிமோடி ரிவோராவின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.
* 1931_39 வரை பல இராணுவ ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டது.
* 1960களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு திறந்த சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்கினர்.
* 1975இல் பிராங்கோவின் மரணத்திற்குப் பிறகு நாட்டின் அரசியல் சக்திகள் ஒருமித்த தலைமையில் செயல்பட்டு ஜனநாயகத்திற்கான பாதையில் பயணம் துவங்கியது.
* 1975இல் அரசுத் தலைவராக கிங் ஜுவான் கார்லோஸ் பதவி ஏற்று, நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
* 1978இல் டிசம்பரில் நாட்டின் ஜனநாயக அரசியலமைப்பு தேசிய வாக்கெடுப்பில் பங்கேற்று அதனை நடைமுறைப்படுத்தினர்.
* நிருவாக ரீதியாக ஸ்பெயின் 17 தன்னாட்சி சமூகங்களாகப் பிரிக்கப்பட்டது.
* மன்னர் அரசாங்கத்தின் பிரதமர், அவரின் முன் மொழிவின் அடிப்படையில் அமைச்சரவை உறுப்பினர்கள் நியமிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டது.
* 1997க்குப் பிறகு தன்னாட்சி சமூகங்களின் பாராளுமன்றங்கள் கட்சிப் பட்டியல்களிலிருந்து விகிதாச்சார அடிப்படையில் 4 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
* 50 மாகாணங்களில் சொந்த நகராட்சி மன்றத்தைக் கொண்டு பிராந்திய அரசாங்கத்தால் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்களும் மொழியும்:
* மக்கள் ஸ்பானியர் (Spanish – Spaniards) என அழைக்கப்படுவர்.
* மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ், இம்மொழி 21 நாடுகளில் அதிகாரப்பூர்வமானது.
* உலகின் மூன்றாவது பிரபலமான மொழி ஸ்பானிஷ்.
* அய்ரோப்பிய ஒன்றியத்தில் 2ஆவது பெரிய நாடு.
அரசு முறைகள்:
* மன்னர்: பெலிப்பே (Felipe – VI)
* பிரதமர்: பெட்ரோ சான்செஸ். (Pedro Sanchez)
* மேல் அவை: செனட்
* கீழ் அவை: பிரதிநிதிகள் காங்கிரஸ்
* நாட்டில் 17 தன்னாட்சிப் பகுதிகள், இரண்டு தன்னாட்சி நகரங்கள் மற்றும் 50 மாகாணங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
* நாட்டில் அரசியலமைப்பு முடியாட்சித் தன்மைகொண்டது.
* மன்னர் நாட்டின் தலைவர். அவரே ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாவார்.
* பிரதமர் மற்றும் அமைச்சரவையை மன்னரே அமைக்கிறார்.
* சட்டமன்ற அதிகாரத்தின்படி கோர்டெஸ் ஜெனரல் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
* சட்டமன்றம் கோர்டெஸ் ஜெனரல்ஸ் இரண்டு அவைகளால் ஆனது.
* கீழ் அவை, மேல் அவை அமைப்புகளில் கீழ் அவைக்கு அதிகமான அதிகாரங்களும் 350 உறுப்பினர்களும் உள்ளனர்.
* 47 பிரதான மாகாணங்களிலிருந்து தலா 4 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
* பிரதமர், துணைப் பிரதமர், உறுப்பினர்கள் அதிக பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியின் தலைவராக இருப்பார்.
* அரசியலமைப்பில் ‘பிராந்தியங்கள்’ மற்றும் தேசியங்களின் சுயாட்சி உரிமைகளை அங்கீகரிக்கப்படுகிறது.
* சுயாட்சி அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை வரையறுப்பது சமூகங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தையின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
உணவு முறைகள்:
* உருளைக்கிழங்கு, வெங்காயம், வெள்ளரிக்காய், மிளகாய் மற்றும் மூலிகைகள் சேர்ந்த சூப் (Gazpacho), காட்டுப் பன்றி இறைச்சி, சாக்லட் வகைகள் பிரபலமானவை.
* தேசிய உணவு வகைகளாக கட்டலான், வலென்சியன், பாஸ்க் ஆகியன அனைத்து மக்களாலும் உண்ணப்படுபவை.
* மாட்ரிட் நகரத்தில் வறுக்கப்பட்ட இறைச்சிகள், காட் மற்றும் துண்டுகளாக வெட்டப்பட்ட குடல் கறிகள், பட்டாணி சூப்கள் மக்கள் விரும்பி உண்ணும் உணவுகளாகும்.
பொருளாதாரம்:
* நாணயம்: யூரோ
* விவசாயம், மீன் பிடித்தல், வானவியல், கட்டுமானம் என அனைத்துத் துறைகளிலும் ஏற்றுமதி செய்யும் அய்ரோப்பாவின் முக்கிய நாடு.
* கப்பல் கட்டுதல், இரும்பு, மருந்துத் தொழில், தாதுக்கள் பிரித்தெடுத்தல் துறைகளில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
* காய்கறிகள், இறைச்சி, பால்பொருள்கள் உற்பத்தியிலும், ஆலிவ் மற்றும் ஆலிவ் எண்ணெய் தயாரித்தலிலும், ஆரஞ்சுப் பழ உற்பத்தியிலும், விற்பனையிலும் சிறந்து விளங்குகிறது.
* கோதுமை, பார்லி, சோளம், ஓட்ஸ், அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகிறது.
* ஆடு, மாடு, கோழிகளின் இரத்தம், கொத்திய இறைச்சி வகைகள், மிளகு மசாலாவுடனான டிரிப் வகை சூப்கள், ஸ்பானிஷ் ஆம்லெட் “டோர்டியா’’, செம்மறி ஆட்டு வெண்ணெய்யான மான்செகோ போன்ற உணவு வகைகள் மக்களால் பெரிதும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
போக்குவரத்து:
* முக்கிய நகரங்களை விமானப் போக்குவரத்து இணைக்கிறது. ரயில், சாலைப் போக்குவரத்து வசதிகளும் சிறப்பானவை உள்ளது.
* ஏற்றுமதி, இறக்குமதிக்காக பார்சிலோனா, பால்மாடி மல்லோர்கா, மலகா துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து முதன்மையானது.
சுற்றுலாத் தலங்கள்:
* சுற்றுலாவுக்குப் பெயர்பெற்ற ஸ்பெயின், பலதரப்பட்ட மக்களையும் கவரக்கூடிய இடங்களைக் கொண்ட நாடு.
* தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பிராடோ அருங்காட்சியகம், தேசிய இனவியல் அருங்காட்சியகம், பயன்பாட்டுக் கலைகளின் தேசிய அருங்காட்சியகம் ஆகியவை வரலாற்று ஆய்வாளர்களைக் கவரக்கூடியவை.
* ரீனா சோபியா கலை மய்யம், டெஸ்கலாஸ் ரியல்ஸ், எல் எஸ்பைரல் மடாலயங்கள் அரச அரண்மனை ஆகியவை பயணிகளைக் கவரக்கூடியவை.
* பொழுதுபோக்குக்கான மத்திய தரைக்கடல் பகுதிகளில் கோஸ்டா டெல் மாரெஸ்மே, கோஸ்டா டோராடா, கோஸ்டா பிளாங்கா, கோஸ்டா பிராவா என பல வகையான ஸ்கை ரிசார்ட்டுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியவை.
* தேசிய பூங்காக்களில் வெப்ப நீரூற்றுகளுடன் கூடிய அருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு:
* கால்பந்து தேசிய விளையாட்டாகும்.
* கால்பந்தாட்ட அணிகளான பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளில் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் விளையாடுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
* நாட்டின் பாரம்பரிய விளையாட்டாக ‘காளைச் சண்டை’ ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
* 2010ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்று, தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றது.
பிற தகவல்கள்:
* ஸ்பானிஷ் மொழி உலகின் புகழ்வாய்ந்த மொழிகளில் ஒன்றாகும்.
* உலகில் உடல் உறுப்புக் கொடையில் முதலிடத்தில் உள்ளது.
* 8 ஆயிரம் கிலோ மீட்டர் கடற்கரை பரப்பைக் கொண்டது.
* நாட்டில் 44 இடங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
* கி.பி.1218இல் நிறுவப்பட்ட சலமன்கா பல்கலைக்கழகம் மிகப் பழமையானது.
* இரண்டு உலகப் போர்களிலும் நடுநிலையாக இருந்த நாடு ஸ்பெயின்.
* பாஸ்க் பகுதியில் பேசப்படும் யூஸ்கெரா உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகும்.