பொது அறிவு
உலகமெங்கும் உயர்ந்த மலைகள்
காஷ்மீரில் உள்ள காட்ஷன் ஆஸ்டின் மலையின் உயரம் 8611 மீட்டர். வடஅமெரிக்காவிலுள்ள மிக உயரமான மலை மிக்கில்லி, உயரம் 6194 மீட்டர். ஆப்பிரிக்கா கண்டத்தில் உயரமான மலை கிலிமன் ஜோதா, உயரம் 5963 மீட்டர். தென்அமெரிக்காவில் உள்ள உயரமான மலை அகன்காகுவா. அர்ஜென்டினா- சிலி எல்லையில் உள்ள இந்த மலையின் உயரம் 6969 மீட்டர். அய்ரோப்பா கண்டத்தில் உள்ள உயர்ந்த மலை எல்புருஸ் – உயரம் 5633 மீட்டர். ஆஸ்திரேலியாவில் உள்ள உயரமான மலை கோசியுஸ்கோ. உயரம் 2276 மீட்டர்.
கடலுக்குள்ளும் வெளியிலும் உள்ள மலையின் பெயர் மவுனாகியே. இது ஹவாய்த் தீவில் உள்ளது. இந்த மலையின் மொத்த உயரம் சுமார் 9100 மீட்டர். கடலுக்கு அடியில் அது 4877 மீட்டர் உள்ளது. கடலுக்கு மேல் அது 4205 மீட்டர் உயரம் உள்ளது.
உலகின் நீர்வீழ்ச்சிகள்
வெனிசுலா
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி – 3212 அடி உயரம்.
தென்ஆப்பிரிக்கா – துகிலா நீர்வீழ்ச்சி – 3110 அடி உயரம்
நார்வே உதிகண்டு நீர்வீழ்ச்சி – 2625 அடி உயரம்
அமெரிக்கா யோசமைட் நீர்வீழ்ச்சி – 2425 அடி உயரம்.
மிகப்பெரிய நதிகள்
ஆப்பிரிக்கா–நைல் நதி – தூரம் 6695 கி. மீ. ஆப்பிரிக்கா – காங்கோ நதி – தூரம் 4374 கி.மீ.
தென்அமெரிக்கா
அமெஸான் நதி – தூரம் 6439 கி. மீ..
வடஅமெரிக்கா
மிசிசிபி_மிசௌரி நதி – தூரம் 5971 கி. மீ.
தொகுப்பு : லட்சுமிசிவம், சென்னை