2025 இல் விமானம் இப்படித்தான்
2025 இல் விமானம் இப்படித்தான்
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு, இன்னும் 15 ஆண்டுகளில் விமானங்கள் எப்படி இருக்கும் ? என்ற கேள்வியுடன் மூன்று நிறுவனங்களை வடிவமைப்பு செய்து தருமாறு கேட்டுக் கொண்டது.லாக்கீட் மார்ட்டின்,நார்த்ரோப் குர்ம்மான்,போயிங் ஆகிய அந்த மூன்று விமானத் தயாரிப்பு நிறுவனங்களும் விமானம் மாதிரி வடிவமைப்புகளைச் செய்துள்ளன.அதில் ஒன்றுதான் இந்த விமான வடிவமைப்பு.
அற்புதமான நூலைப் படிக்க வாய்ப்பு
தமது அலுவலக அறைக்கு மின்தூக்கி (Lift) வழியே சென்றார் ஜவஹர்லால் நேரு. மின்தடை காரணமாக மின்தூக்கி பாதியில் நின்றுவிட்டது. சில மணித்துளிகள் கழித்து மின்சாரம் வந்தது. மின்தூக்கியிலிருந்து வெளியில் வந்தார் நேரு.
பதட்டத்துடன் வெளியில் நின்றிருந்த அலுவலர்கள், இடையூறு ஏற்பட்டமைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று பணிவுடன் வேண்டினர்.
தமக்கேயுரிய புன்னகையுடன் நேரு, எந்த இடையூறும் ஏற்படவில்லை. காரணம், என் கையில் அற்புதமான நூல் இருந்தது. அந்த நேரத்தில் நல்ல நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்ததே என மகிழ்ந்தேன் என்றார்.