அந்தக் குழந்தை இதுதான்.
இந்தப் பெண் குழந்தையின் பெயர் சுயுமன் கட்யான் (Syuman Khatyun). 6 வயதான இந்தக் குழந்தையின் எடை 41.5 கிலோ.மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தை பள்ளிக்கூடம் செல்கிறாராம்.ஆனால்,அங்கே தன்னுடன் படிக்கும் மாணவர்கள் தன்னைக் கேலி செய்வதாகக் குறைபட்டுக் கொள்கிறார்.மேலும் பள்ளிக்கூடம் செல்லும்போது தனக்குத் தேவையான முழு உணவையும் கொண்டு செல்ல முடியவில்லையே என வருத்தப்படுகிறார்.இவளது தாய் தந்தையான ஜலால் கான்-பெல்லி பீபீ ஆகியோரின் மாத வருமானம் 1,000 ரூபாய்தானாம்.இந்த வருவாய்க்குள் இக்குழந்தையை வளர்க்க படாத பாடுபடுகிறார்கள்.பிறக்கும்போதே அதிக எடையுடன் பிறந்த சுயுமன் கட்யானுக்கு அதீதப் பசிக்கான சுரப்பிகள் அதிகரித்திருந்ததால் இந்த அளவுக்கு உணவு தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.