புத்தர் பற்றிய கதை
புத்தர் யார்?
புத்தர் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை. எந்த நேரத்திலும் மரணம் அவரைத் தழுவும் என்பதை உணர்ந்த தொண்டர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்து சோகத்தில் ஆழ்ந்தனர். புத்தர் அருகில் இருந்த தொண்டர் ஒருவர், துயரம் தாங்காமல் கதறியழுது கொண்டே இருந்தார். இலேசாகக் கண்விழித்த புத்தர் மெல்லிய குரலில்,
“ஏன் நீயே இப்படிக் கதறி அழுகிறாய்? மனதைத் தைரியப்படுத்திக் கொள். நான்தான் மீண்டும் நிச்சயம் பிறப்பேனே… இதனைப் பலமுறை உனக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறேனே’’ என்று சொன்னார். எவ்வளவுதான் ஆறுதல் கூறினாலும் அந்தத் தொண்டரால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சற்றே அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “புத்தரே, நீங்கள் மீண்டும் பிறப்பீர்கள் என்றால் நான் எப்படி உங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்?’’ என்று கேட்டார்.
புத்தரின் முகத்தில் இலேசான புன்னகை மலர்ந்தது!
“என்னை நீ அடையாளம் கண்டு கொள்வது மிகவும் எளிது. அன்பையும் நற்றொண்டையும் அறப்பண்பையும் நாம் விதைத்த பகுத்தறிவையும் நீ எவரிடத்திலெல்லாம் காண்கிறாயோ அவரெல்லாம் புத்தர் என்பதை உணர்ந்து கொள்…’’ என்றார் புத்தர்.
– த.சோ.நறுமுகை, 6 ‘அ’