2016 கடந்து வந்த பாதையில்
![2017_jan_pinju58](https://periyarpinju.com/wp-content/uploads/2017/01/2017_jan_pinju58.jpg)
2016 கடந்து வந்த பாதையில்
1. 199 நாடுகளின் விவரங்களை மனப்பாடமாக கூறும், சிறுவன் அனுருத் ஸ்ரீவர்ஷனுக்கு யூனிக் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்க வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான _ கவிதைப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சலாமே, ஜோயே ரெய்ஸ்பெர்க், கோபால் ராமன், மாயா ஈஸ்வரன் மற்றும் ஸ்டெல்லா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
3. மும்பையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மொஹித் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சரோ சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
4. அகமதாபாத்தைச் சேர்ந்த 22 வயதான ஜர்னா ஜோஷி. இவர் மோர்பியைச் சேர்ந்த பளிங்குக்கல் தொழிற்சாலையிலிருந்து 111 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.
5. இந்திய வரலாற்றில் முதல் முறையாக விமானப் படையில் போர் விமானங்களை இயக்கும் பணிக்கு அவனி சதிர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
– பவினிதா