கோழி முந்தியா? முட்டை முந்தியா?
அறிவியல் சொன்ன பதில்
மஞ்சை வசந்தன
கோழி முந்தியா? முட்டைமுந்தியா? இது, நீண்ட நெடுங்காலமாய் எழுப்பப்படும் கேள்வி.
முட்டை முந்தியென்றால், கோழியில்லாமல் முட்டை எப்படி வந்தது? என்று மேலோட்டமாக ஆராய்ந்தால் இப்பிரச்சினை தீராது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரச்சினைக்கு விடை காண இயலும். இப்பிரச்சினைக்கு இரு வகைகளில் விடையளிக்க முடியும். (1) தர்க்க ரீதியாக விளக்கம் (2) அறிவியல் ரீதியான விளக்கம்.
1. தர்க்க ரீதியான விளக்கம்:
முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும்.
உலகப்புகழ் பெற்ற மனிதர்கள்
மதம் கடந்த மா மன்னர் அக்பர்
கு.வெ.கி.ஆசான்
ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியை ஆண்ட மா மன்னர்கள் இருவருக்கும் உலக வரலாற்றில் பெருமைக்குரிய இடம் உண்டு. ஒருவர் மவுரிய மரபில் வந்த அசோகர்; இவர் மகதப் பேரரசை கி.மு. 273 முதல் 232 வரை நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிசெய்தவர். இரண்டாமவர், மொகலாய மரபில் வந்த ஜலாலுதீன் மொகமது அக்பர், பாபருக்குப் பேரனாகவும், ஹூமாயூனுக்கு மகனாகவும் கி.பி. 1542 நவம்பர் 23 இல் பிறந்த அக்பர், 1556 இல் அரசர் ஆனார்: சுமார் 50 ஆண்டுகள் ஆட்சிசெய்து, 1605 அக்டோபர் 27 இல் புகழ் பெற்ற பெரு மன்னராக மறைந்தார்.
நம்பிக்கையும் உண்மையும்
இளங்கண்ணன்
உலகின் குளிர்ந்த பகுதி
நம்பிக்கை: உலகிலேயே குளிர் மிகுந்த பகுதிகள் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள்தான்.
உண்மை: நமது பூமியில் வேறு எந்தப் பகுதியையும் விட வெப்பம் மிகுந்த இடங்களாகவும் துருவங்களால் இருக்க இயலும். வடக்கு சைபீரியா மற்றும் மத்திய கிரீன்லாந்து பகுதிகளில் உள்ளதை விட வடதுருவத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது.
|