தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-36
கே.பாண்டுரங்கன்
நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH]
இதுவரை பார்த்த நேர்க்கூற்றும் அயற்கூற்றும் நன்றாகப் புரிந்ததா?
உங்கள் மீது நம்பிக்கை கொண்டு கல்வியை நாடுங்கள்!
எதை ஒன்றையும், சிறிய பகுதியாகப் பிரித்து… பிரித்துப் படித்தால்… திரும்பத் திரும்ப ஆர்வமாக, ஒரு விருப்பமான விளையாட்டாகப் பார்த்தால்… படித்தால்… அது நன்றாக மனதில் அப்படியே நிற்கும் _ நம் பெயரை எப்படி மறக்காமல் நினைவில் வைத்துள்ளோமோ அது போல!
வேறு விதமாகச் சொல்லுவதெனில், புரியாத ஒன்றுதான் நம்மைப் பயமுறுத்தும். புரிந்துவிட்டால்…?
நடக்க நாம் எப்படிக் கற்றோமோ, சைக்கிள் ஓட்ட எப்படிக் கற்றோமோ… அது போல எளிதாகிவிடும்.
அதற்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டும். அலைபேசியை அலமாரியில் வைத்துவிட்டு அரைமணி நேரம் பெரியார் பிஞ்சை வாசிக்க வேண்டும். வாசிக்க, வாசிக்க நேசிக்கத் தோன்றும். தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பது என்பது ருசிக்கின்ற, ரசிக்கின்ற வேலையாகிவிடும்.
சரி… இனி ஆங்கிலத்தின் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்.
Noun, verb, Articles, Preposition, Conjunction, Tense, Voice, Adjective, Adverb, Degrees of Comparison, Direct Speech, Indirect Speech – – என்று தமிழால் ஆங்கிலத்தின் சுவை அறிந்தோம்.
ஆங்கிலத்தில் PREFIX, SUFFIX என்ற முறைகள் உண்டு. அதை இப்போது பார்ப்போம்.
முன்னொட்டுச் சொல் [றிஸிணி’திமிஙீ]
கோடுகளால் இணைக்கப்பட்ட இந்த மூன்று கோண வரைபடத்திற்கு தமிழில் என்ன பெயரிடுவோம்?
முக்கோணம் என்றுதானே!
மூன்று கோணங்கள் இணைந்துள்ளதை சுருக்கமாக ’முக்_ கோணம்’ என்கிறோம்.
இதைப்போன்று ஆங்கிலத்தில்,
முக்கோண_த்தை TRI-ANGLE என்று சொல்வோமல்லவா?
இவ்வாறு முன்புறம் உள்ள சொல்லோடு ஒட்டி வரும் முன்னொட்டுச் சொல்லை ஆங்கிலத்தில் PREFIX என்பர்.
PREPOSITION [ In, Between, above, below…] போன்று இது முன்னிடைச் சொல் இல்லை.
இது- முன்னொட்டுச் சொல் [PRE’FIX]
இது
- சொல்லோடு ஒட்டி வரும்.
- தனித்து நிற்காது,
- இது பண்புச் சொற்களிலும் [Adjectives], வினை உரிச் சொற்களிலும் [Adverbs] அமைந்து வரும்.
(எ-கா):
Pre’judge_ முன்’முடிவெடுத்தல்
Para’medical _ துணை’ மருத்துவம்
Re’tired _ ஓய்வான (‘சோர்வு’)
Im’moral _ ஒழுக்கமில்லா
In’finitive _ முடிவில்லா
Semi’ final _ அரை’யிறுதி
முன்னொட்டுச் சொல் [PRE’FIX] உள்ளது போன்றே. பின்னொட்டுச் சொல்’லும் [SUFFIX] ஆங்கிலத்தில் உண்டு.
பின்னொட்டுச் சொல்[SUFFIX]
சூரிய காந்திப் பூவின் தோற்றத்தை தமிழில் வியப்பான, அழகான _ என்று சிலாகிப்போம்.
இதையே ஆங்கிலத்தில்…
Wonder’ful
Beauti’fully
_ என்போம்.
இதுவும்
- சொல்லோடு ஒட்டி வரும்.
- தனித்து நிற்காது,
- இது பண்புச் சொற்களிலும்[Adjectives], வினை உரிச் சொற்களிலும் [Adverbs] அமைந்து வரும்.
(எ-கா):
Excite’ment_ உற்சாகம்
Friend’ship _ நட்பு
Kind’ness _ அன்பு
Truth’fully _ உண்மையுள்ள
Honest’ly _ நேர்மையான
”தமிழ் மழை பொழிந்தது… ஆங்கில (இலக்கண)ஆறு நிறைந்தது _ மூளைக் கடலுக்கு நிறைவுறா கொள்ளளவு உண்டு!”
(தொடரும்…)