வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம்
மரகதமணி
உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்லாமல் நேரத்தைச் செலவிட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கையையும் வாழ்க்கைத் தரத்தையும் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் மேம்படுத்துவது உண்மைதான். இது பல வழிகளில் உலகின் எல்லாப் பகுதியினரையும் நெருக்கமாக்கி வருகிறது. உலகில் எங்கிருந்தாலும் நாம் நினைத்த போதெல்லாம் ஒரு நொடியில் நம் குடும்பம், நண்பர்கள், எல்லோரிடமும் பேச வைக்கிறது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில், நாம் நம் உறவுகளுடன் அருகில் இருந்தாலும் இந்த மென் கருவிகள் அதிகப்படியான இடைவெளியை உருவாக்கி விடுகின்றன. ஆளுக்கொரு கருவியைக் கையில் வைத்துக் கொண்டு அதுவே உலகம் என்று சுருங்கி விடுகிறோம். உரையாடல், விளையாட்டு, பொழுதுபோக்குகள் எதுவும் குடும்பத்தினருடன் நிகழாமல் இடைவெளி ஏற்பட்டு விடுகிறது.
இந்த இடைவெளியைக் குறைக்கவே Gadget Free hour என்ற முன்னெடுப்பு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் குழந்தைகளுடன் விளையாடுவது, பேசுவது, சாப்பிடுவது, தாத்தா பாட்டியிடம் கதை கேட்பது போன்ற அவற்றில் ஈடுபடுவதன் மூலம் அந்த நேரத்தை மிகவும் பயனுள்ள முறையில் உறவுகளுடன் செலவழிக்கலாம். இதனால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் விளையாடும் போது அவர்களுக்கு நேர்ந்த பல நிகழ்வுகள், பார்த்தவை, கேட்டவை, சந்தித்தவை என அனைத்துத் தகவல்களும் பகிரப்படும்.
இவை உறவுகளை வலுப்படுத்தும். குழந்தை-களுக்குப் பெற்றோரின் அரவணைப்புக் கிடைக்கும்.
*பேரண்ட் சர்க்கிள்” என்னும் இதழ் 2019ஆம் ஆண்டு முதல் Gadget Free hour என்ற பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று தங்களது குழந்தைகளுடன் குறைந்தது ஒரு மணிநேரம் செலவிட வேண்டும் என்று தொடங்கியது. இந்த ஆண்டு இந்த நிணீபீரீமீt திக்ஷீமீமீ லீஷீuக்ஷீ உலகக் குழந்தைகள் நாளான நவம்பர் 20 அன்று நடைபெற்றது. ஆண்டுக்கொரு முறை Gadget Free hour
என்பது போதாது. வாராவாரம் Gadget Free hour என்று வந்தால் கூட நல்லது தான். அதை நாமே திட்டமிட்டுக் கொண்டு, குடும்பத்துடன் நேரம் செலவிடலாம். குழந்தைகளான நாமும் வீடியோ கேம்ஸ், ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ்களைக் கொஞ்சம் ஓரம்கட்டி பெற்றோருடன் நேரம் செலவிட வேண்டும்.
“நான் இன்று இவ்வளவு நேரம் இதைத் தொடமாட்டேன்.” என்று பெற்றோர் அறிவித்து விட்டு அவர்களுக்கு முன்னுதாரணமாக நாமே இருக்கலாம். சரிதானே!