• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செயத்தக்க… ப.மோகனா அய்யாதுரை

2023_jan_38
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்

கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்றால் உலகம் முழுமையும் முடங்கிப் போனது. பெரும் வர்த்தக நிறுவனங்கள் கூட கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. பெரும் பணம் படைத்தவர்கள்கூட வாழ்வா? சாவா? என்ற நிலையில் உயிருக்குப் போராடினர். பலர் மடிந்தே போயினர்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, வருங்கால சமுதாயத்தைக் கட்டமைக்கும் அடுத்த தலைமுறை பள்ளி மாணவர்கள் கற்றலில் பெரும் இடைவெளியைச் சந்தித்து வருகின்றனர். இந்த கற்றல் இடைவெளியைச் சரி செய்ய அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பல முனைகளில் இருந்தும் மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகின்றன.

எமர்சன் கூற்றுப்படி “குதூகலமின்றிச் செய்யப்படும் எந்த ஒரு செயலும் முழுப் பலனை அளிக்காது.” அந்த வகையில் மாணவர்கள் வெறும் புத்தகங்களின் வாயிலாக மட்டும் முழு அறிவையும் பெற்று விட முடியாது. எண்ணும் எழுத்தும் பற்றிய அறிவு இருக்க வேண்டியது அவசியம்தான். அதற்காகத் தான் பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அதை நோக்கியே எப்போதும் பயணிக்க வேண்டும் என்று மாணவச் செல்வங்களை கட்டாயப்படுத்த முடியாது; கட்டாயப்படுத்தவும் கூடாது.
அவ்வகையில் தமிழ்நாடு அரசால் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் நிறைவாக மாநில அளவில் நடத்தப்பட்டு வரும் கலைத் திருவிழாக்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் குதூகலிப்பைக் கொண்டு வந்துள்ளன.

எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாணவர்களும் தங்கள் திறமைகளை வெளிக் காட்ட ஒரு பொது மேடை கிடைத்துள்ளது.அடிப்படை வசதி கூட இல்லாமல் படிக்கும் மாணவர்களின் திறமைகள் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது.பறை, சிலம்பம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைகளும் மாணவச் செல்வங்களால் புது வடிவம் பெற்றுள்ளன.முடங்கிக் கிடந்த மாணவர்கள் அனைவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கிடைத் திருக்கும் இந்த வாய்ப்பைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். பலதரப்பட்ட போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்கிறார்கள். முழு ஈடுபாட்டோடு தங்கள் திறமைகளை வெளிப் படுத்துகின்றார்கள்.கலை இலக்கிய நிகழ்வுகளால் மட்டுமே பல தரப்பட்ட மாணவர்களை இத்தகு மகிழ்ச்சியில் மூழ்கடிக்கச் செய்ய முடியும்.

கொரோனா காலத்தில் குழந்தைகள் இழந்ததும் இது போன்ற சின்னச் சின்னக் கொண்டாட்டங்களைத் தான். கலைத் திருவிழாக்களின் முடிவில் வெற்றி, தோல்வி என்பதை எல்லாம் தாண்டி அவர்களின் மனம் குளிர்ச்சி அடைந்துள்ளது. முழு உற்சாகம் தொற்றி உள்ளது. புது உத்வேகம் பிறந்துள்ளது.“அரசுப் பள்ளி மாணவர்களா?” என்றவர் கள் எல்லாம் அண்மைக் காலமாக அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளைக் கண்டு வியக்கின்றனர். சமூக வலைதளங்கள் யாவற்றையும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமைகளால் ஆக்கிரமித்துள்ளனர். இந்த விலையில்லா  வெகுமதி, கற்றலில் அடுத்த கட்டத்துக்கு அவர்களை நகர்த்தும். அவர்களது கனவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளச் செய்யும்.

கலைத் திருவிழா போன்ற மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொண்டுவரும் பல திருவிழாக்கள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். பாடப் புத்தகங்களைத் தாண்டி பயன் தரும் நல்ல பல புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கும் பழக்கத்தை பள்ளி வயதிலேயே மாணவர்களிடம் விதைக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மை அவர்களிடம் உண்டாகும்படி செய்ய வேண்டும். அதற்கான முன்னெடுப்பை அரசும், ஆசிரியர்களும் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறை மாணவர்கள் சமுதாய வளர்ச்சிக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை நல்கிட, நாம்தான் அவர்களுக்கு நல்வழி காட்டிட வேண்டும்.<

16
இரட்டைக் கயல்இரட்டைக் கயல்6th January 2023
சிறார் கதை6th January 2023சிறார் கதை

மற்ற படைப்புகள்

2022_oct_25
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
17
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
8th November 2024 by ஆசிரியர்

பிஞ்சு நூல் அறிமுகம்: குறும்புக்காரன் குவேரா

Read More
2021_jan_v36
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

அதிசயம்! ஆனால் உண்மையா? – 2 : பார்வை ஒன்றே போதுமா?

Read More
1
அக்டோபர் 2024பாடல்கள்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
3rd October 2024 by ஆசிரியர்

“எண் திசையும் ஏற்கும்”

Read More
11
கதைஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by எழுத்து, ஓவியம்: மு.கலைவாணன்

காட்டுவாசி – 5: ”எங்கப்பா அமுதா?” ”எங்க போனான் இந்த மாணிக்கம் பய?

Read More
2020_jun_v7
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்
4th June 2020 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு வாசகரின் கடிதம் – பரிசு பெற்றேன்; தொகையைக் கொடுத்தேன்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p