• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by விழியன்

சாக்லேட் மரம்

2023_feb_4
கதை கேளு கதை கேளுபிப்ரவரி2023

விழியன்

மூவரின் கனவிலும் சாக்லேட் மரம் வந்து-கொண்டே இருந்தது. சாக்லேட் வழிந்துகொண்டே இருந்தது. மரத்தின் இலைகள் சாக்லேட்டாக இருந்தன. கிளைகள் சாக்லேட், அதன் விதைகள் சாக்லேட். தண்டுப்பகுதியும் சாக்லேட். எல்லாமே பழுப்பு நிறத்தில்தான் இருந்தன. மரத்தில் இருந்து ஒரு இலையைப் பறித்தால் உடனே அங்கே ஒரு இலை வந்துவிடும். அதுவும் சாக்லேட் இலைதான். கிளையை உடைத்தாலும் அப்படித்தான். தண்டுப்பகுதியில் தொட்டு நக்கினால் அவ்வளவு சுவை. அந்தப் பகுதியே சாக்லேட் வாசத்தால் நிறைந்து இருந்தது. மூவருக்குமே இதே போன்ற கனவு. மாறி மாறி வரும். காலை எழுந்ததுமே இன்றைக்கு சாக்லேட் மரம் எப்படி இருந்தது என்று விவரிப்பார்கள். நிநிநி, கககா, லுலுலு இவர்கள்தான் அந்த மூவர். ஒன்றாகப் பிறந்த மூவர். மும்மூர்த்திகள். அப்படியும் சொல்லமுடியாது கககா ஆண் குழந்தை, மற்ற இருவரும் பெண் குழந்தைகள். ஒரே மாதிரி ஆடைகள் போட்டால் யார் நிநிநி, கககா, லுலுலு எனக் கண்டுபிடிப்பது சிரமம்.
“அந்த சாக்லேட் மரம் மெய்யாலுமே இருக்குமா?” – நிநிநி
“கனவை எல்லாம் நம்பினா வேலைக்கு ஆகுமா?” – கககா
“அப்ப எப்படி அதே கனவு மூனு பேருக்கும் மாத்தி மாத்தி தினமும் வருதாம்?” – லுலுலு
“ஆமால்ல”
“ஆமாவா இல்லையா?”
இன்னும் அவங்க வயசை நீங்க கேட்கல. மூனு பேர் வயதையும் கூட்டினா பதினைந்து. ஒரு நாள் அவங்க வீட்ல வளக்குற அணிலைத் துரத்திட்டு ஓடினாங்க. அணில் அவங்களை எங்கோ கூட்டிக்கிட்டுப் போச்சு. அவங்களும் வேகமா ஓடினாங்க. ஒரு மலை மாதிரி இருந்த இடத்தை அடைந்ததும் அது சர்ர்ன்னு காணாமப் போயிடுச்சு. எங்க போச்சுன்னு தேடினாங்க. கிடைக்கல. அந்த இடத்தில ஒரு குளம் இருந்தது. ஒரு மரத்தின் நிழலில் மூவரும் நின்றார்கள்.

“ஹே, உங்களுக்குச் சாக்லேட் வாசனை வருதா?”
“ஆமாம். கனவுல வர்ற அதே சாக்லேட் வாசனை”
“அதேதான்”
சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. காய்ந்த மரங்கள், செடிகள், தூரத்தில் சில காகக்கூட்டம். ஆளுக்கு ஒரு திசைக்குச் சென்று தேடலாம் என்று பிரிந்தார்கள். நிநிநிக்கு குளத்தின் அருகே இருந்து சாக்லேட் வாசனை வந்தது. அதன் அருகே சென்றாள். ஒரு குட்டி மீன் திடீரென நீரில் இருந்து வெளியே எட்டிப்பார்த்து, “நிநிநி, சாக்லேட் மரம் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். என்கூட வரியா?” என்றது. என்னடா இது திடீரென மீன் பேசுதுன்னு ஆச்சரியம். இம்மாம் சின்னா மீனு, இதுகூட நான் எப்படி போவது என யோசித்தாள் நிநிநி. “வா ஏறு” என்று சொல்லி மீன் நிநிநியைவிடப் பெரிதானது. மெல்ல குளத்தில் இருந்த மீன் மீது ஏறினாள். “கெட்டியா பிடிச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு லபக் என்று நீருக்குள் சென்றது. குளத்தின் கீழே வேறு ஒரு உலகம் இருப்பதைப் பார்த்தாள் நிநிநி. குட்டிக் குட்டி மீன்கள் எல்லாம் கை அசைத்தன. மீண்டும் சாக்லேட் வாசனை வந்ததும் சுற்றிப் பார்த்தாள். அந்த மீன் நின்றது. அவர்கள் எதிரே அந்த சாக்லேட் மரம் இருந்தது. கனவில் பார்த்தது போலவே இருந்தது. வாயடைத்து நின்றாள்.
ஆனால் மரம் வாட்டமாக இருந்தது. அது மகிழ்ச்சியாக இல்லை என்பது நன்றாகப் புரிந்தது.

“ஹலோ சாக்லேட் மரமே… எப்படி இருக்க?”
“இதோ பயந்து நீருக்கு அடியில ஒளிஞ்சிட்டு இருக்கேன் நிநிநி” என்றது.
அதற்குள் மரத்தில் வழிந்த சாக்லேட்டை ருசிக்க ஆரம்பித்து இருந்தாள். திடீரென அப்பகுதியே அதிர்ந்தது. தூரத்தில் உருண்டையாக அவர்களை நோக்கி ஏதோ வந்தது. தரையில் படுத்துவிட்டாள். உருண்டை அவளைக் கடந்தது. அது சாக்லேட் மரத்தின் வாய்க்குள் சென்றது. மின்சாரம் தாக்கினால் எப்படி அதிருமோ அப்படி மரம் அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர் சமநிலைக்கு வந்தது.
“நீரில் விழுந்த நெகிழிகள் அந்த உருண்டை. நீரில் இருக்கும் உயிரினங்கள் அதனால் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. நான் அவற்றை உண்டு என் உயிரை மெல்ல மெல்லத் தியாகம் செய்கின்றேன். எல்லா இடத்திலும் குப்பை போட்றாங்க நிநிநி” என்றது மரம் சோகமாக.

இதே சமயம் கககாவிடம் ஒரு மண்புழு பேசி, கககாவைச் சின்னதாக்கி மண்ணுக்குள் அழைத்துச் சென்று இருந்தது. பூமிக்கு அடியில் கககா சாக்லேட் மரத்தைச் சந்தித்தான். ஒரே இருட்டாக இருந்தபோது அங்கே சில மின்மினிப் பூச்சிகள் மின்னவே, சாக்லேட் மரத்தைப் பார்த்துவிட்டான். அவனும் வாயடைத்து நின்றான். அதே மரம். ஆனால் மூச்சுவிடவே சிரமப்பட்டது. நீருக்கு அடியில் சாக்லேட் மரம் எப்படி உருண்டையை விழுங்கியதோ அதே போல இங்கும் ஓர் உருண்டை வந்தது. “நிலத்திற்கு அடியிலும் மக்காத குப்பைகள் கக்கா” என்று மெலிந்த குரலில் சொல்லியது.
லுலுலுவின் கதையே வேறு. வெண்புறா ஒன்று அவளை அழைத்துச்சென்றது. ஆமாம் மேகத்திற்கு மேலேதான். அங்கேதான் அவள் சாக்லேட் மரத்தைப் பார்த்தாள். “சாக்கி…” என ஓடி அணைத்துக்கொண்டாள். கை, உடல் முழுக்க சாக்லேட் ஒட்டிக்கொண்டது. “நீதான் எங்க கனவில வந்ததா?” எனப் பேச ஆரம்பித்தாள். அவளுடைய வெள்ளைச் சட்டை முழுக்க பழுப்பு நிறமாக மாறி இருந்தது. திடீரென புறாவின் கண்களில் ஏதோ பயம் தொற்றிக்கொண்டது. என்ன ஏது எனப் புரிந்துகொள்ள முயலும் முன்னர் காற்றில் ஒரு சுழற்சி. கருமை நிறத்தில் இருந்தது. புயல்போலச் சுழன்று வந்தது. சாக்லேட் மரம் ஆவென வாயைத் திறக்க, புழுதி அதற்குள் சென்றது. “காற்றில் இருக்கும் மாசினை விழுங்கினேன்” என நடுக்கத்துடன் சொன்னது சாக்லேட் மரம். இந்த மரத்திற்கு விழுதுகள் நிறைய இருந்தன.

‘ஊஞ்சல் ஆடலாமா?’ என லுலுலு கேட்டாள். ‘ஓ’ என்றது மரம். திடீரென தட் தட் தட் என சத்தம். விழுதில் ஆடுவதை நிறுத்திவிட்டு மரத்தின் அருகே சென்றாள். இரண்டு கதவுகள் இருந்தன. இரண்டிற்குப் பின்னால் இருந்துதான் தட்டுகின்றார்கள்.
நீருக்கு அடியில் இருக்கும் மரத்திலும், பூமிக்கு அடியில் இருக்கும் மரத்திலும் இதேபோல இரண்டு கதவுகள் இருந்தன. மூவரும் ஒரே நேரத்தில் மற்ற இரண்டு கதவுகளையும் திறந்தனர்.
“லுலுலு…”
“ஹே கககா…”
“அட நிநிநி”
மூவரும் முதன்முதலாக பிரிந்து சென்ற மரத்தின் கீழே நின்றுகொண்டிருந்தார்கள்.
“நீங்க சாக்லேட் மரத்தை பார்த்தீங்களா?”
ஆமாம் என்று தலை ஆட்டினார்கள்.
“ஆனா பாவம்”
“ஆமா பாவம்”
கககா தன் பாக்கெட்டில் இருந்து குச்சி ஒன்றினை எடுத்தான். சாக்லேட் கிளை. “இதை நம்ம தோட்டத்தில் நட்டுவைத்து வளர்ப்போம். அது பத்திரமாக வளர உலகை மாற்றுவோம்”
“மாற்றுவோம்”

21
எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள்எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள்2nd February 2023
செம்ம அழகுல்ல!2nd February 2023செம்ம அழகுல்ல!

மற்ற படைப்புகள்

2016_dec_pinju14
கதை கேளு கதை கேளுடிசம்பர்
7th December 2016 by விழியன்

பால் பாயாசம்

Read More
2020_apr_v27
எப்ரல் 2020கதை கேளு கதை கேளு
28th March 2020 by விழியன்

ஏழடிச் சுவர்

Read More
11
கதை கேளு கதை கேளுபிஞ்சு 2025பிப்ரவரி 2025
4th February 2025 by விழியன்

கதை கேளு கதை கேளு : ஆரஞ்சு மாயத்தோட்டம்

Read More
2023_jan_8
கதை கேளு கதை கேளுஜனவரி 2023
5th January 2023 by விழியன்

மூழ்காக் கப்பல்

Read More
2021_jun_v34
கதை கேளு கதை கேளுஜூன் 2021
1st June 2021 by விழியன்

கண்ணாமூச்சி ரே ரே..

Read More
2022_May_3
கதைகதை கேளு கதை கேளுமே 2022
27th April 2022 by விழியன்

காணாமல் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p