• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மீள்வோம்! மீட்போம்!: நில நடுக்கம் ஏற்பட்டால் தப்புவது எப்படி?

2023_mar_3
மார்ச் 2023மீள்வோம் மீட்போம்

(இடர் மீட்புத் தொடர்)

2023 பிப்ரவரி மாதத்தின் 6-ஆம் நாள் உலகின் மிகப்பெரிய துயரங்களுள் ஒன்றாக துருக்கி சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் 47000 உயிர்களைப் பலி கொண்டு விட்டது.
இயற்கைப் பேரிடர்கள் எங்கும் எப்போதும் நிகழலாம் அதற்கு நாம் அணியமாக இருப்பதும், அப்படி ஏற்படும் நேரங்களில் நம்மைத் தற்காத்துக் கொண்டு பிறரையும் காப்பதும் நம் கடமை. அது குறித்து நமக்காக விரிவாக எடுத்துரைக்க இருக்கிறார் பொய்யா மொழி மாமா.
நிலநடுக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து நாம் எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றிக் காண்போம். அதற்கு முன்பு பேரிடர் என்றால் என்ன? பேரிடருக்கும் (Disaster) விபத்திற்கும் (Accident) என்ன வேறுபாடு? என்பதைப் பார்ப்போம்.

ஒரு சம்பவம் அல்லது விபத்து ஏற்பட்டு சிறிது நேரத்தில் அல்லது சில மணி நேரத்தில் அது சரி செய்யப்பட்டு விட்டால், அவையெல்லாம் விபத்து. எடுத்துக் காட்டாக, நாம் விளையாடும் பொழுது கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால், உடனே எழுந்து சென்று விடுவோம்; அல்லது யாராவது தூக்கி விடுவார்கள்.
ஒரு வீடு எரிகிறது என்றால், நாம் தண்ணீர் ஊற்றி அணைத்து விடுவோம்; அல்லது தீயணைப்பு வாகனம் வந்து நீரடித்து அணைத்து விடும். அத்துடன் அந்த இடம் சரி செய்யப்பட்டு விடும். இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டால் அருகில் உள்ளவர்கள் தூக்கிக் காப்பாற்றி விடுவார்கள். தேவையென்றால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். இவை போன்றவை எல்லாமே விபத்துகள்.

அதே சம்பவம் அல்லது விபத்து பெரிதாக நடந்து, தொடர்ந்து அரசுத் துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் என பல்வேறு வகையான  உதவிகள் சில நாள்களுக்கோ பல நாள்களுக்கோ தொடர்ந்து தேவைப்பட்டால் அவை எல்லாம் பேரிடர்  எனப்படும். எடுத்துக் காட்டாக 2004 இல் ஏற்பட்ட சுனாமி. கஜா, வர்தா புயல்கள், துருக்கி, சிரியாவில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் போன்றவை  ஆகும். இப்பொழுது நீங்களே யோசித்து எவை எல்லாம் விபத்து, எவையெல்லாம் பேரிடர் என்று தெரிந்து கொள்ளலாம்.
இனி நாம் பேரிடர்கள் பற்றிக் காண்போம்.
பேரிடர்கள் இரண்டு வகைப்படும்
1. இயற்கையாக ஏற்படுபவை
2. மனிதர்களால் ஏற்படுத்தப்படுபவை. அவை என்ன என்ன என்று அடுத்து வரும் கட்டுரைகளில் காண்போம்.
இப்போது முதல் கேள்விக்கு வருவோம். நில நடுக்கம் என்றால் என்ன?

நிலநடுக்கம் அல்லது பூமி அதிர்ச்சி அல்லது பூகம்பம் (Earth Quake) எல்லாம் ஒன்றுதான். பூமிக்கு அடியில் ஏற்படும் அழுத்தத்தினால் தளத்தட்டுகள் (Lithospheric Plates) நகர்ந்து கொண்டே இருக்கின்றன – கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒன்று முதல் 12 சென்டிமீட்டர் வரை நகர்வு இருக்கும். அப்படி நகரும் பொழுது, இரண்டு தட்டுகள் ஒன்றோடு ஒன்று லேசாக உராயும் போதோ அல்லது  மோதிக் கொள்ளும் போதோ ஏற்படும் அதிர்வு நிலநடுக்கம் எனப்படுகிறது.
தளத்தட்டுகள் என்பவை கிட்டத்தட்ட 75 முதல் 100 கிலோ மீட்டர் உயரமும் ஆயிரம் கிலோமீட்டர் நீள அகலமும் கொண்டவை.  அவ்வாறு ஏற்படும் நிலநடுக்கத்தை நிலநடுக்கப் பதிவுக் கருவி மூலம் அளவிடலாம். அதற்கு ரிக்டர் (Ricther) அளவுகோல் எனப் பெயர். 3 ரிக்டருக்கும் கீழ் உள்ளவற்றை நம்மால் உணர முடியாது. 3-7 ரிக்டர் அளவு உள்ளவற்றை எளிதில் உணரலாம். 7 ரிக்டருக்கும் மேல் உள்ளவை சேதத்தை ஏற்படுத்தும். 9 ரிக்டருக்கும் மேல் உள்ளவை பலத்த சேதங்களை ஏற்படுத்தும்.

ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஏறத்தாழ அய்ந்து லட்சம் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சம் மட்டுமே மக்களால் உணரப்படுகின்றன. அதில் சில நூறு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அண்மையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலநடுக்கம் 6.2. 2023 இல் துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்டது. அது  7.8 ரிக்டர்  ஆகும்40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதே போல் இந்தியாவில் 26.1.2001 இல் குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் 7.7 ரிக்டர் ஏற்பட்டது. அதில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கிட்டத்தட்ட அய்ந்து லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.இந்தியாவில் வடக்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளிலேயே பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டு உள்ளன. தமிழ்நாட்டில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு  குறைவு. ஆனாலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்களே ஏற்படும். எனவே, நாம் பயப்படத் தேவையில்லை.அவ்வாறு ஏற்பட்டால் நாம் எப்படி தற்காத்துக் கொள்ளலாம் எனக் காண்போம்.=    நிலநடுக்கம் என்பது இயல்பாக ஒன்றரை முதல் இரண்டு, இரண்டரை நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். எனவே, நாம் உடனடியாக செயல்பட்டு நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

=     வீட்டின் கீழ் பகுதியில் பள்ளியின் கீழ் பகுதியில் இருக்கும் பொழுது பூகம்பம் ஏற்பட்டால் உடனடியாக வெட்ட வெளிக்கு (Open Space) ஓடிவிட வேண்டும்.

=    மாடியின் மேல் பகுதியிலோ. பல மாடிக் குடியிருப்பு (Apartment) போன்ற பகுதிகளிலோ வசித்தால் இறங்கி ஓடி வர முடியாத சூழலில் இருந்தால் ஒவ்வொரு அறைகளின் (Room) மூலைகளில் (Corner) தலையைக் குனிந்து தலையின் மேற்பகுதியில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட வேண்டும்.
=    கனமான மேசை, கட்டில் போன்றவற்றின் கீழேயும் சென்று படுத்துக் கொள்ளலாம்.
=    கட்டடங்கள் இடியும் பொழுது அறையின் நடுப்பகுதியிலேயே அதிகமான பாதிப்பு ஏற்படும்.
=    சுவரின் ஓரங்களில் முக்கியமாக மூலைப் பகுதிகளில் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். சிறிய காயங்களுடன் நாம் மாட்டிக் கொள்ளும்போது மீட்புப் படையினர் நம்மை எளிதில் காப்பாற்றி விடுவார்கள்.
நாம் நிலநடுக்கம் பற்றி இந்த வாரம் பார்த்தோம். இதில் உங்களுக்கு ஏதாவது அய்யங்கள் (Doubts) இருந்தால் பெரியார் பிஞ்சு ஆசிரியர் பகுதிக்கு உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

– தே. பொய்யாமொழி,
இயக்குநர், பெரியார் சமூக காப்பு அணி, தஞ்சாவூர்.

 

31
குருவியும்... குரங்கும்...குருவியும்... குரங்கும்...1st March 2023
சின்னக்கைச் சித்திரம்1st March 2023சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2023_april_24
ஏப்ரல் 2023சூழலியல்மீள்வோம் மீட்போம்
5th April 2023 by ஆசிரியர்

மீள்வோம் மீட்போம்

Read More
2023_mar_30
கதை கேளு கதை கேளுமார்ச் 2023
4th March 2023 by விழியன்

கூலிங் க்ளாஸ் குணாளன்

Read More
2023_mar_9
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 6: தேன்… கெட்டுப் போகுமா?

Read More
2023_mar_28
அறிவியல்மார்ச் 2023
4th March 2023 by ஆசிரியர்

அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை

Read More
20
ஆகஸ்ட் 2023பிஞ்சு 2023மீள்வோம் மீட்போம்
2nd August 2023 by தே.பொய்யாமொழி

இடர்மீட்புத் தொடர் : மீள்வோம் மீட்போம்!

Read More
2023_mar_12
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p