துணுக்குச் சீட்டு – 7 : அபி
செங்கடல் சிவப்பா?
பள்ளிக்கூடத்துல வேலை ஒன்னுமே இல்லாத போது உலக வரைபடத்தை உற்றுப் பார்ப்பேன் கருங்கடல், செங்கடல் எல்லாம் கண்ணுல பட்டு இருக்கு. அப்போதுல இருந்தே செங்கடல், சிவப்பாவா இருக்கும்னு ஒரு கேள்வி இருந்துகிட்டு இருந்துச்சு. சரி, செங்கடல் சிவப்பாவா இருக்கும்?
செங்கடலுல, சுமார் 200 வகையான கடற் பவழங்கள் இருக்கு, அதோட, அது ரொம்ப ஆழம் குறைந்த கடலும் கூட. செங்கடல் எனும் பெயரின் காரணத்துக்கு பல Theory சொல்லப்படுது. அதுல இரண்டைப் பார்க்கலாம்.
செங்கடலில் இருக்கும் கடற்பவழங்களில் ஒன்றான Trichodesmium Erythraeum சிவப்பாக இருக்கும். இது குறிப்பிட்ட பருவத்தில், கடலுக்குள் பூத்துக் குலுங்கி, பின்னர் இறந்து கடலின் மேற்பரப்புக்கு வந்து மிதக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த கடற்பவழம் கடலில் மிதக்குறதால, கடலின் சில பகுதிகள் சிவப்பாக தெரியும்.
இதோட, இன்னொரு Theory யும் சொல்லப் படுது, அது கலாச்சாரம் சார்ந்தது. முன்னாடிலாம், சீனா, திபெத், Turkic கலாச்சாரங்களில், திசைகளை நிறங்கள் மூலமாக சொல்லுவாங்க. பொதுவாக தெற்குத் திசையைச் சிவப்பு, வடக்கைக் கருப்பு, மற்ற திசைகளை மஞ்சள் மற்றும் வெள்ளை என குறிப்பிடப்படுவாங்க. அதனாலேயும் செங் கடலுக்கு அப்படி பெயர் வந்து இருக்கலாம்னு சொல்லப்படுது. செங்கடல், ஸ்கூபா டைவிங்குக்கு பெயர் போனது. கடலின் பெயர்க்காரணம் எதுவா இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது, அங்க போய் கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு உலகத்தைப் பார்க்கணும்பா!<