”கல்வியே உயர்செல்வம்”
பள்ளிக் கூடம் திறக்கின்றார்
புத்தகப் பையைத் தேடிடுவாய்!
பள்ளிக் கூட மணியடிக்கும்
துள்ளிக் குதித்தே சென்றிடுவாய்!
வைத்த தேர்வில் வென்றதனால்
வகுப்பு மாறி அமர்ந்திடுவாய்!
புத்தகம் புதிதாய்த் தந்திடுவார்
புரட்டிப் படிப்பாய் நித்தமுமே!
கள்ளங் கபடம் இல்லாமல்
கசடறத் தினமும் கற்றிடுவாய்!
காலை மாலை படித்திட்டால்
கவலை இல்லை வாழ்வினிலே!
பள்ளிக் கூடம் சென்றால்தான்
பண்பை அன்பை வளர்த்திடலாம்!
கல்விச் செல்வம் கருவூலம்!
கற்றால் வணங்கும் புவிக்கோளம்!<
– ஆ.ச. மாரியப்பன்
புதுக்கோட்டை