சிறுவர் கதை : உண்மை பேசு
வசீகரன்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வழக்கம்போல் தொடங்கிவிட்டன.
பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு ஆசிரியரான வேதநாயகி முதல் நாளன்று வகுப்பில் “கோடை விடுமுறைக்கு யார் எங்கே போனீங்கன்னு வரிசையா ஒவ்வொருத்தரும் சொல்லுங்க…’’ என்றவுடன்…
லதா எழுத்து “மிஸ்! நாங்க ஊட்டி, போனோம்….’’ என்றால்.
“மிஸ்! நாங்க மதுரை சித்திரைத் திருவிழா பொருள்காட்சிக்குப் போனோம்…’’ என்றால் ஹேமா.
பயனுள்ள வகையில் கழித்த பாத்திமா “மிஸ்! நான் கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போனேன்…’’
“மிஸ்! எங்கம்மாதான் எப்பவும் ஆடு மேய்க்கப் போவாங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுனால நானும் என் தம்பியும் சேர்ந்து ஆடு மேய்க்கப் போனோம்.’’ என்று சொன்னார் நாசம்மை.
அதைக் கேட்டு வகுப்பில் இருந்த மாணவிகள் அனைவரும் ஏளனமாகச் சிரித்தனர்.
“இங்க பாருங்க கேர்ள்ஸ்! தாய் – தந்தைக்கு உதவுறது ஒண்ணும் கேவலம் கிடையாது. அது எந்த வேலையா இருந்தாலும் சரி. பொய் சொல்லாம உண்மையைச் சொன்ன நாச்சம்மையை நாம எல்லோரும் பாராட்டணுமே தவிர, பரிகாசம் செய்யக் கூடாது’’ எனஅறிவுரை கூறினார்.
வகுப்பில் இருந்த மாணவிகள் அனைவரும் “ஓ.கே.மிஸ்!’’ என தலையசைத்து அதை ஆமோதித்தனர்.
“ஆனால், இப்படி உதவுனதோட விட்டுடணும்… அதையே வாழ்க்கையா அமைச்சுக்கக் கூடாது. நீயும் தம்பியும் நல்லா படிச்சு முன்னேறி, இந்தக் கஷ்டங்களை வென்று காட்டணும். புரியுதா நாச்சம்மை? என்று சொல்லவும் தவறவில்லை.