கணக்கும் இனிக்கும் : வாகன எண் பலகைகளில் இருப்பவை என்ன?
உமாநாத் செல்வன்
நீங்கள் எல்லோரும் சைக்கிள், கார், பைக், ஆட்டோ, பேருந்து ஆகியவற்றில் சென்றிருப்பீர்கள். லாரி, ரயில், விமானம், ராக்கெட் இதில்? கார், பைக், லாரி, ஆட்டோ, பேருந்து இவற்றிற்கு ஓர் ஒற்றுமை உண்டு. ரொம்ப யோசிக்க வேண்டாம். அவற்றைச் சாலையில் ஓட்ட போக்குவரத்துத் துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஒவ்வொரு வண்டியிலும் ஒரு எண் பலகை (Number Plate) இருக்கும். பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?
ஆமாம் அதே தான். ஒவ்வொரு வண்டியின் முன்னாலும் பின்னாலும் நான்கு இலக்க எண் இருக்கும். வெறும் நான்கு இலக்க எண் மட்டுமா இருக்கும்? சட்டென அருகே இருக்கும் ஒரு வண்டியில் என்ன எண் இருக்கு எனப் பார்த்துவிட்டு வாருங்கள்.
TN-21 D 7532
இதே போல இருக்கா?
இதில் TN – என்ற முதல் இரண்டு எழுத்துகள் இந்தியாவில் எந்த மாநிலம் என்பதைக் குறிக்கும். தமிழ்நாட்டிற்கு TN, கேரளாவிற்கு KL, கருநாடகத்திற்கு KA, ஆந்திரப் பிரதேசத்திற்கு AP, புதுச்சேரிக்கு (அது யூனியன் பிரதேசம் அதற்கும் தனிப் பெயர் உண்டு) PY. நமது அண்டை மாநிலங்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் இப்படி இரண்டு எழுத்துகள் உண்டு.
அடுத்த இரண்டு எண்கள் (எடுத்துக்காட்டில் வரும் 21) என்பது பொதுவாக மாவட்டத்தைக் குறிக்கும். பெரிய மாவட்டங்கள் எனில் கூடுதல் எண்களும் கொடுக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் TN- 23 என்றுவரும், மதுரைமாவட்டத்திற்கு TN- 58. இந்த எண்களை வழங்குவது RTO – Regional Transport Office.
அடுத்ததாக ஒன்றோ அல்லது இரண்டு ஆங்கில எழுத்துகளோ வரலாம். நமது எடுத்துக்காட்டில்
D. (பழைய வண்டிகளுக்கு இவை இரண்டுமே இல்லாமல் இருக்கும், ஏன் என்று கட்டுரை முடிவதற்குள் புரிந்து விடும்).
கடைசியாக நான்கு இலக்க எண்கள்.
(0001 – 9999) இதுவரைக்கும் வந்து
எல்லா மேகணிதம்தான். இன்னும் கொஞ்சம் இதில் கணக்குப் போடுவோம்.
TN-21D – xxxx. இந்த மாதிரி மொத்தம் எத்தனை வாகனங்கள் போகலாம். நான்கு இலக்கம் என்று சொல்லியாச்சு.
ஓர் இலக்கம் எனில் 0 முதல் 9 வரை – 10 எண்கள்
இரண்டு இலக்கம் எனில் 01 முதல் 99 வரை – 100 எண்கள்
மூன்று இலக்கம் எனில் 001 முதல் 999 வரை- 1,000 எண்கள்
நான்கு இலக்கம் எனில் 0001 முதல் 9999 வரை – 10,000 எண்கள்.
ஒரு மாவட்டத்தில் வாகன எண்கள் தர ஆரம்பிக்கும்போது முதன்முதலாக
TN-21 0001 என ஆரம்பித்து இருப்பார்கள். வரிசையாகக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தற்போக்கு (Random) எண்ணாக இருக்கும் 9874 அடுத்து 4345 அடுத்து 0982 என மாறி மாறி வரும். (சில எண்கள் அரசுக்கு ஒதுக்கி இருப்பார்கள்). சில ‘ஃபேன்ஸி’ எண்கள் 9999, 8888, 7744, 1111 போல சில எண்களைக் கூடுதல் கட்டணம் செலுத்திப் பெறலாம். [சிலர் எண் ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்து கூட்டுத்தொகை இவ்வளவு வரவேண்டும் என சில எண்களைப் பணம் கொடுத்து வாங்குகின்றனர். அது அறிவியலே அல்ல]
சரி, ஒரு மாவட்டத்தில் 10,000 வாகனங்களுக்கு மேல் தாண்டிவிட்டது எனில் என்ன செய்வது? ஒரு நாள் சென்னையில் புதிதாக வாங்கப்படும் கார், பைக், ஆட்டோ ஆகியவற்றின் எண்ணிக்கை தெரியுமா? 2020ஆம் ஆண்டு வரை மட்டும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 32.63 லட்சம். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகின்றது. சரி, இப்ப 10,000 தாண்டிவிட்டால் எப்படி எண்ணைத் தருவது? அதற்குத்தான் ஓர் ஆங்கில எழுத்தினைச் சேர்க்கின்றனர்.
TN-21 என்ற வரிசையில் 0001 – 9999 வரை 10000 எண்கள் முடிந்தபின்னர்,
TN-21 A 0001 – 9999 – இதுவும் ஒரு 10 என ஆயிரம்தான்பா. அடுத்து A, B, C, D, E என Z வரை செல்லும்.
TN-21 {A,B,C,D,…Z} {0001-9999}.
சரி, அடுத்த கேள்வி இதுவும் முடிஞ்சிடுச்சு. [அப்படின்னா எவ்வளவு வாகனங்கள் பதிவாகி இருக்கும்?] ஓர் ஆங்கில எழுத்துக்கு 10,000 எண்கள், 26 ஆங்கில எழுத்துகள் மொத்தம் 26 ஙீ 10,000 = 2,60,000 – (இரண்டு லட்சத்து அறுபதாயிரம்.)
ஓர் ஆங்கில எழுத்து முடிந்தால் அடுத்த ஆங்கில எழுத்து TN – 21 AA {0001 – 9999} – இதுவும் முடிந்துவிட்டால் கிகி, கிஙி, கிசிஞ் கிஞீ வரை தொடரும்.
இதுவும் முடிந்துவிட்டால்?
அடுத்து என்ன
TN-21 BA {0001-9999}
இப்படியே ஒவ்வோர் ஆங்கில எழுத்தாக அதிகரிக்கும்.
சரி, அடுத்த முறை சாலையில் வாகனத்தில் எண் பலகையைப் பார்க்கும்போது இதனைக் கவனியுங்கள். அந்த எண்ணை வைத்தே எவ்வளவு புதிய எண்கள் எனக் கண்டுபிடிக்கலாம். உள்ளூர் வண்டியா, பக்கத்து மாநில வண்டியா, பக்கத்து மாவட்ட வண்டியா என்பதைக் கண்டறியலாம். இப்படிக் கவனித்தாலே எண்கள் உங்களுக்கு இன்னும் பிடிக்க ஆரம்பிக்கும்.