• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குட்டிக் கதை : வெற்றிக்கான சூத்திரம்

2023_June_24
கதைசிறார் கதைஜூன் 2023

ம.பொடையூர் வெங்கட. இராசா

விவசாயி ஒருவர் வளர்த்து வந்த வயது முதிர்ந்த, பொதி சுமக்கும் கழுதை ஒன்று அவரது தோட்டத்தில் இருந்து வறண்ட கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.
உள்ளே விழுந்த கழுதை அலறிக் கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றிக் காப்பாற்றுவது என்று அவர் விடிய விடிய யோசித்துப் பார்த்தும் ஒரு வழியும் புலப்படவில்லை.
அவர் காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்தக் கழுதையின் விலையைவிட, அதிகச் செலவு பிடிக்கக் கூடியதாக இருந்தது.
அந்தக் கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. இது தவிர அது வயது முதிர்ந்த கழுதைதான் என்பதால் அதைக் காப்பாற்றுவது வீண் வேலை, வெட்டிச் செலவு என்று முடிவு செய்த அவர் கழுதையுடன் அப்படியே அந்தக் கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தார்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்குக் கூப்பிட, அனைவரும் திரண்டனர்.
சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியால் அள்ளிக் கொண்டு வந்து, அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். நடப்பதை உணர்ந்த அந்தக் கழுதை, மரண பயத்தில் சத்தமாக அலறியது. ஆனால், அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை.
இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளித் தொடர்ந்து கொட்டக் கொட்ட, கொஞ்ச நேரம் கழித்து அந்தக் கழுதையின் அலறல் சத்தம் குறைந்து கொண்டே வந்தது.
ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளிக் கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே அந்த விவசாயி எட்டிப் பார்க்க, அவர் பார்த்த காட்சி அவரை வியப்பிலாழ்த்தியது. மண்ணை ஒவ்வொரு முறையும் கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒருமுறை உதறிவிட்டு மண்ணைக் கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே ஏறி நின்று வந்தது.
கழுதை, தன் இடைவிடாத முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்புக்கே வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை துள்ளிக் குதித்து ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மைப் படுகுழியில் தள்ளி, குப்பைகளையும், மண்ணையும் நம்மீது கொட்டிப் பார்க்கும். ஆனால், நாம்தான் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் அவற்றை உதறித் தள்ளி மேலே வர வேண்டும். இதுவே நம் வாழ்வின் வெற்றிக்கான சூத்திரம்.

40
பயனுள்ள சுற்றுலா : கீழடி எனும் வரலாற்றுப் பெட்டகம்!பயனுள்ள சுற்றுலா : கீழடி எனும் வரலாற்றுப் பெட்டகம்!10th June 2023
கோமாளி மாமா-35 : முயல் நீ10th June 2023கோமாளி மாமா-35 : முயல் நீ

மற்ற படைப்புகள்

14
கதைசெப்டம்பர் 2024பிஞ்சு 2024
4th September 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது?எங்கள் ஊரில் முதல் கடவுள் மறுப்பாளன்!

Read More
12
கதைபிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? ஒரு குட்டிப் பேயும் நான்கு நண்பர்களும்

Read More
11
கதைஜூலை 2023பிஞ்சு 2023
20th July 2023 by சிகரம்

தொடர் கதை – 7 : வரதாச்சாரியின் வாதம்

Read More
2021_jan_v30
கதைசிறார் கதைஜனவரி-2021
21st January 2021 by ஆசிரியர்

சிறுவர் கதை : எலிகள் சேமித்த மழைநீர்

Read More
2018_mar_s27
கதை கேளு கதை கேளுமார்ச்
14th March 2018 by - விழியன்

சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற லோலிமா

Read More
2023_June_13
அறிவியல்கணக்கும் இனிக்கும் (தொடர்)ஜூன் 2023
10th June 2023 by ஆசிரியர்

கணக்கும் இனிக்கும் : வாகன எண் பலகைகளில் இருப்பவை என்ன?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p