எப்படி? எப்படி?
வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வருவது ஏன்?
-அ.ஆதித்யா, துவரங்குறிச்சி
வெங்காயம் உரிக்கும் போதுதான் கண்களில் நீர் வரும் என்றில்லை, கண்களில் எப்பொழுதும் கண்ணீர் வந்துகொண்டேதான் இருக்கும். நாம் அடிக்கடி கண் இமைப்பதும் அதனால்தான். அடிக்கடி சுரக்கும் கண்ணீரைக் கொண்டு இமை கண்களைச் சுத்தப்படுத்துகிறது. அதில் மீதமுள்ள நீர் மூக்கிற்குப் போய்விடுவதால் நமக்குத் தெரிவதில்லை.
வெங்காயத்திலுள்ள வேதிப் பொருள் வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணில் உள்ள நரம்பில் படவே, அந்தச் செய்தியை மூளைக்குத் தெரியப்படுத்துகிறது.
உடனே, மூளை அதை அகற்றுமாறு கட்டளையிடுகிறது. எனவே, கண்ணீர் தோன்றுகிறது. அந்தக் கண்ணீர் நம் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறது.
– முகில் அக்கா