சேதி தெரியுமா?
1. கிழக்காசிய நாடுகளுள் எந்த நாட்டில் நாடாளுமன்றத்திற்கான 26ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்றது? அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகும் தகுதியைப் பெற்றவர் பெயர் என்ன?
2. அண்மையில் ஒரு கோவிலில் மூடி வைக்கப்பட்டிருந்த அறைகளைத் திறந்தபோது ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தங்க, வைர, வைடூரியங்கள் கிடைத்தன. அக்கோவிலின் பெயர் என்ன? எந்த ஊரில் உள்ளது?
3. தமிழக அரசு பள்ளிகளில் கொண்டாடிய கல்வி வளர்ச்சி நாள் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டது. அது எந்தத் தலைவரின் நினைவாகக் கொண்டாடப்பட்டது? அந்த நாள் உங்களுக்கு நினைவில் உள்ளதா?
4. தனது கடைசிப் பயணத்தை ஜூலை 8 அன்று தொடங்கிய விண்வெளி ஓடத்தின் பெயர் என்ன? எந்த நாட்டைச் சேர்ந்தது?
5. அண்மையில் அதிவேக புல்லட் ரயில் எந்த நாட்டில் எந்தெந்த நகரங்களுக்கிடையே விடப்பட்டது?
6. பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (அய்.எம்.எப்.) முதல்பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
7. உலகிலேயே மிக நீளமான பாலம் எங்கு உள்ளது? அதன் நீளம் எத்தனை கிலோ மீட்டர்?
8. சிறீஹரிகோட்டாவிலிருந்து அண்மையில் இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டின் பெயர் என்ன? இதுவரை செலுத்தப்பட்ட மொத்த ராக்கெட்டுகள் எத்தனை? இவற்றுள் தோல்வியடைந்த ராக்கெட்டின் பெயர் என்ன?
9. கடந்த ஜூலை மாதம் செய்திகளில் அதிகம் அடிபட்ட மோசடிச் சாமியாரின் பெயர் என்ன?அவர் நடத்தி தோல்வியில் முடிந்த யாகத்தின் பெயர் என்ன?
10. கடந்த ஜூலையில் இன்னும் இரு மடாதிபதிகள் நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்குக்காக ஆஜர் ஆனார்கள்; அந்த மடாதிபதிகள் யார்?அந்தக் கொலை வழக்கின் பெயர் என்ன?
விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்