பெற்றோர்களே! இதக் கொஞ்சம் படிங்க!
குழந்தைகளுக்கான பிரபல தொலைக்காட்சியான போகோவில் நிகழ்ச்சி நடத்துபவர் ஹாரூன் ராபர்ட். விதவிதமாக புதுமைப் படைப்புகளை சில நிமிட நேரத்தில், படபடவென இவர் செய்யும் பொருள்களைப் பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. குழந்தைகளைக் கொண்டே நிகழ்ச்சிகளை நடத்தும் இவர், இதுவரை பல நூறு குழந்தைகளின் மன நிலையை அறிந்தவர். அவரிடம் கேட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்:
குழந்தைகள், பெரியவங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்குறாங்க?
முதல்ல நட்பான அணுகுமுறை. அவங்க அளவுக்கு இறங்கிப் பழகணும். ரெண்டாவது, குழந்தைகள் புதுசு புதுசா கத்துக்கணும்னு நினைப்பாங்க.
புதுப்புது விஷயங்களை, திட்டாம பொறுமையாக சொல்லித் தரணும். இந்த ரெண்டையும் சரியா செஞ்சா, நீங்கதான் அவங்களுக்கு நீங்கள்தான் அவர்களின் முதல் நண்பர்.
என்ன… கேட்டீங்களா?