உலக நாடுகள்
தலைநகரம் லுசாகா ( LUSAKA )
ஆங்கிலம் அலுவலக மொழியாகப் பேசப்படுகிறது.
கிறித்தவர்களும், இசுலாமியர்களும் அதிகம் வசிக்கின்றனர்.
நாணயம் க்வாசா (KWACHA) என்றழைக்கப்படுகிறது.
1964 அக்டோபர் 24 அன்று விடுதலை பெற்று குடியரசாகியுள்ளது.
குடியரசுத் தலைவராக ரூபியா பாண்டா (RUPIAH BANDA) உள்ளார்.
துணைக் குடியரசுத் தலைவராக ஜார்ஜ் குண்டா ( GEORGE KUNDA) உள்ளார்.
செம்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ள உலக நாடுகளுள் ஒன்று.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாம்பியாவில் வேட்டைக்காரர்களின் குடியேற்றமே இருந்தது. படிப்படியாக பல இன குடியேற்றம் ஏற்பட்டது. அய்ரோப்பியக் கண்டுபிடிப்பாளர்கள் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தனர். பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இருந்தது. முதன்மைத் தலைமைப் பிரதிநிதியாக பிரிட்டிஷ் மன்னர் இருந்தார்.
இதன் பழைய பெயர் வட ரொடீஷியா என்றழைக்கப்படுகிறது. டேவிட் லிவிங்ஸ்டன் என்ற அய்ரோப்பியர் சாம்பசி (Zambezi) ஆற்றின் மேலே உருவாகும் அருவியை 1855இல் கண்டுபிடித்துள்ளார்.
விக்டோரியா அருவி என்று பெயரும் வைத்துள்ளார். பின்பு, குயின் விக்டோரியா (QUEEN VICTORIA) என்று அழைக்கப்பட்டது. சாம்பசி (Zambezi) ஆற்றின் பெயரிலிருந்து சாம்பியா என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சாம்பசி என்பதற்கு God’s River என்று பொருள் கூறுகின்றனர். சுதந்திர சிலை ஒன்று அரசு கட்டடத்தின் முன் உள்ளது.
புவியியல் அமைப்பு
இது ஒரு தென் மத்திய ஆப்ரிக்க நாடு. முழுவதும் நிலத்தால் சூழப்பட்டது. வடக்கே காங்கோ, வடகிழக்கில் தான்சானியா, கிழக்கே மாலவி, தெற்கே ஜிம்பாவே, மொசாம்பிக், நமிபியா, மேற்கே அங்கோலா எல்லைகளாக அமைந்துள்ளன.
கல்வி
இரண்டு நிலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வி 1-9 வரையிலும், உயர்கல்வி 10-_12 வரையிலும் வழங்கப்படுகின்றன. 7 ஆண்டுகள் மட்டுமே இலவசமாக கல்வி கற்க முடியும். பின்பு, கல்விக் கட்டணங்களைக் கட்டாயம் கட்ட வேண்டும். எனவே, சில குழந்தைகள் 7 ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்குச் செல்லாத நிலையும் காணப்படுகிறது.
சாம்பியா பல்கலைக்கழகம் (University of Zambia), முலுங்குஷி பல்கலைக்கழகம் (Mulungushi University), காப்பர்பெல்ட் பல்கலைக்கழகம் (Copperbelt University) என்ற மூன்றும் முக்கியமான பல்கலைக்கழகங்களாகும்.
வேளாண்மை
பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்காச்சோளம், கரும்பு, புகையிலை, பருத்தி ஆகியன முக்கிய விளைபொருள்களாக உள்ளன.
தொழில்
மீன் பிடித்தல், சிமெண்ட், செம்புப் பொருள், மரச்சாமான், விவசாயம் சார்ந்த உற்பத்திப் பொருள்கள் தயாரித்தல் ஆகியன நடைபெறுகின்றன.
ஏற்றுமதிப் பொருள்கள்
தங்கம், வெள்ளி, செம்பு, சோடியம், சர்க்கரை, புகையிலை, துணி, அஸ்பெஸ்டாஸ்.
இறக்குமதிப் பொருள்கள்
பெட்ரோலியப் பொருள்கள், எந்திரங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கோதுமை.
கனிம வளம்
செம்பு, துத்தநாகம், காரியம், கோபால்ட், மாங்கனீசு, சுண்ணாம்புக்கல்.