எப்படி? எப்படி?
மலை உச்சியில் மட்டும் அருவி தோன்றுவது ஏன்?
– கி. செந்தமிழ்ச் செல்வன், மதுரை
நிலத்தடியில் சேமிக்கப்பட்ட மழை நீரால்தான் ஊற்று உண்டாகிறது. நிலத்தின் மண், பாறையின் தன்மைக்கேற்ப சில மீட்டர் ஆழத்தில் நீர்ப்படுகை நிறைந்திருக்கும். மலை உச்சியிலிருந்து சில மீட்டர்களுக்குக் கீழே இந்த நீர்ப்படுகை இருக்கும். இதிலிருந்து நீரானது கசிந்து மலையின் பக்கவாட்டில் வெளிவந்து மலைச்சரிவில் அருவியாக -ஓடுகிறது. இவ்வாறு மலை உச்சியில் அருவிகள் தோன்றுகின்றன.
சமவெளிப் பகுதியில் இந்த நீர்ப்படுகை தரைக்குக் கீழே சில மீட்டர் ஆழத்தில் இருக்கும். இந்த நீர் கசிந்து வெளிப்பட வாய்ப்பில்லை. அதனால்தான், நாம் கிணறு வெட்டி நீரை இறைக்கிறோம்.
– முகில் அக்கா