மனித மூளை சுருங்குமா?
மனிதனின் பரிணாம வளர்ச்சியை, மனித மூளையை இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் மார்தா லாகர் தலைமையில் செயல்படும் குழுவினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
ஆப்ரிக்கா, அய்ரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகளை ஆராய்ச்சி செய்து வந்த இவர்களுக்கு, அண்மையில் இஸ்ரேலில் உள்ள குகைகளிலிருந்து மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன.
இந்தக் குகையில் கிடைத்த மண்டை ஓடுகள் 1 லட்சம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களுடையவை. அந்த மனிதர்கள் மிகவும் உயரமாகவும், நல்ல உடலமைப்புடன் வலிமையுள்ளவர் களாகவும் இருந்தவர்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அவர்களின் உடல் அமைப்பை, தற்போதுள்ள மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், மனிதனின் உயரமும் உடல் எடையும் குறைந்துள்ளதுடன் மூளையின் அளவும் 10 சதவிகிதம் சுருங்கி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தற்போதுள்ள உணவு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையும் இதன் காரணமாக ஏற்படும் நோய்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.