பிஞ்சு வாசகர் கடிதம்
வணக்கம் இனியன் மாமா
நீங்க எழுதுன கதையை ஏப்ரல் மாத பெரியார் பிஞ்சு இதழில் படித்தேன். நல்லா இருந்தது. தலைப்பு நல்லா இருந்தது. “தவறு!” எனக்கு அந்த பர்வீன் கதாபாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது. அடுத்தது தமிழழகி நல்ல தோழியாக இருந்தாள். அவள் செய்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இக்கதையில் சில ஒற்றுமை இருந்தது. அவை:
முக்காடு, முஸ்லிம் மதம், வகுப்பு, தமிழ் அம்மா
முக்காடு விசயம் போல நிறைய விசயம் இருக்கிறது. மீண்டும் இக்கதையின் அடுத்த பாகம் சீக்கிரம் வரணும் என்று ஆசையுடன் விடைபெறுகிறேன்.
– ரிஃபா, சின்னமனூர்