பிஞ்சு வாசகர் கடிதம்
பெரியார் பிஞ்சு ஆசிரியர் அவர்களுக்கு, பள்ளி மாணவனாகிய நான் மதுரையில் வசிக்கிறேன். என் வகுப்புத் தோழனாகிய கி.மணிவண்ணன், அவனது பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர் “பெரியார் பிஞ்சு’’ மாத இதழை சந்தா செலுத்திப் பெறுகின்றனர். இதழை மணிவண்ணன் படித்த பின் எனக்குப் படிக்க இரவல் கொடுப்பான். இவ்விதம் கடந்த 4 மாத இதழ்களைப் படித்து மகிழும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
– ஆ. சுந்தரம்,
மாநகராட்சி இளங்கோ உயர்நிலைப்பள்ளி, மதுரை