• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 8 : வலியில் கத்தும் செடி

2023_may_24
பிஞ்சுகள் பக்கம்மே 2023

அபி

 

ஒரு விஷயம் தெரியுமா? செடி, மரம் எல்லாம் சத்தம் போட்டுக் கத்துமாம். அப்போ, ஏன் நம்மளால அந்தச் சத்தத்தைக் கேக்க முடியல? அவை உண்மையாகவே கத்துமா?
இது தானே உங்க கேள்வி..
ஆமாம், செடி சத்தம் போடும்.
நம்மளால 20KHz வரைக்கும் தான் கேக்க முடியும் ஆனால், நம்ம செடி நண்பர்கள் எல்லாம், 40-80KHz அளவில் சத்தம் போடும். அதனால் தான் நமக்கு அதோட கூச்சல் கேக்கல. இதெல்லாம் நானா சொல்ற கதை இல்லைங்க, ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவு தான் சொல்லுது. இந்த ஆய்வுக்கு, முக்கியமாக தக்காளிச் செடியைப் பயன்படுத்தி இருக்காங்க. ஆய்வுக்காக, பாதி வெட்டபட்ட செடி, நீர் இல்லாம வாடிய செடி மற்றும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்குற செடியைப் பயன்படுத்தி இருக்காங்க.
நல்ல ஆரோக்கியத்தோடு இருக்குற செடி, ஒரு மணி நேரத்துக்கு, ஒரு தடவை சத்தம் போட்டு இருக்கு. தண்ணீர் இல்லாம வாடிப் போன செடி, ஒரு மணி நேரத்துக்கு, 35 தடவை தண்ணீர் வேணும், தண்ணீர் வேணும் என்று கேட்டுகிட்டே இருந்து இருக்கு (தண்ணீர் இல்லேன்னா,  தண்ணீர் வேணும்னுதான் கேட்கும், அது அதோட மொழியில் கேட்டு இருக்கு.. இதெல்லாம் கண்டுக்கப்படாது!) பாதி வெட்டப்பட்ட செடி ஒரு மணி நேரத்துக்கு 25 தடவை சத்தம் போட்டிருக்கு. இது இருக்கட்டும், திரையரங்குல படம் பார்க்கும்போது கொரிக்க Popcorn வாங்கும்போது, அதை பொரிக்கும்போது வருகிற சத்தத்தைக்  கவனிச்சு இருக்கீங்களா? அந்த சத்தத்தைப்போல தான், நம்ம செடி போடுற சத்தமும் இருக்கும்.
‘செடி போடும் சத்தம், காற்றில் பரவுமா?’ என்ற இந்த ஆய்வுக்கு, தக்காளிச் செடியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில், ஒலிவாங்கியை (Microphone) வைத்து ஆராய்ச்சி செய்து இருக்காங்க. செடி வெளியிடும் ஒலியை அந்த ஒலிவாங்கி மூலமாக வாங்கி அதை மனிதர்கள் கேட்கக் கூடிய ஒலியில் வெளியிட்டு இருக்காங்க நம்ம ஆய்வாளர்கள்.  செடியில் xylem என்று ஒரு vascular தசை இருக்கு. இதன் வழியாகத் தான் வேரிலிருந்து செடி முழுவதும் தண்ணீர் போகும். தண்ணீருடன் காற்றுக் குமிழிகளும் xylem- சைலத்தில் செல்லும் போது, கொஞ்சம் கொஞ்சமாக, காற்றுக் குமிழிகள் பெரிசாகி, நீர் போகவிடாமல் தடுக்கும். இதைக் குமிழாதல்னு (cavitation) சொல்லுவாங்க. இந்தக் குமிழாதல் ஏற்படுவதால இந்தச் சத்தம் வரலாம்னு சொல்றாங்க. மேலும்,  இந்த சத்தம் எப்படி வருது என்பதற்கான விரிவான ஆய்வை நடத்திக்கிட்டு இருக்காங்க. கோடை காலம் வந்துடுச்சு, பாவம் வெளிய இருக்குற செடி ரொம்ப நேரமா தண்ணீர் வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்கும், அதுக்கும் கொஞ்சம் குடுங்களேன், பாவம் அது!

 

20
படக்கதை : தமிழவேள் உமாமகேசுவரனார்!படக்கதை : தமிழவேள் உமாமகேசுவரனார்!4th May 2023
நான் தேடிப்பிடிச்சுக் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லலாம்னு வரும்போது, என் காலு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு ஆகுது. ஆமா அதைப் பத்தித் தான் சொல்ல வந்தேன். கால் மரத்துப் போய், நாம உடனே எழுந்தால், அந்த இடம் ஏன் ஜிவ்வுன்னு ஆகுது?4th May 2023நான் தேடிப்பிடிச்சுக் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லலாம்னு வரும்போது, என் காலு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு ஆகுது. ஆமா அதைப் பத்தித் தான் சொல்ல வந்தேன். கால் மரத்துப் போய், நாம உடனே எழுந்தால், அந்த இடம் ஏன் ஜிவ்வுன்னு ஆகுது?

மற்ற படைப்புகள்

2020_nov_v31
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
16th November 2020 by ஆசிரியர்

மாமழை போற்றுவோம்!

Read More
2020_oct_v13
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_August_18
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

மாணவராட்சி

Read More
28
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்பொது அறிவு
7th December 2024 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
25
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவு
3rd March 2025 by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 25 : கருவிழி என்ன நிறம்?

Read More
2020_feb_a17
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

மன்னிச்சூ…..

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p