துணுக்குச் சீட்டு – 9 : சூரியனை நெருங்கினா? சுடுமா? குளிருமா?
கோடை வெயிலில் வியர்வையிலேயே ஒரு நாளைக்கு 10 தடவை குளிச்சாச்சு, இதுக்கு மேல முடியாது, விடுங்கப் பா வண்டிய, பக்கத்துல இருக்குற மலைக்குனு எத்தனை பேர் போனிங்க? அட, சொல்லுங்க பா! ஏன்னா… நானும் அப்படித் தான் போய்ட்டு வந்தேன். மலைக்கு மேல போகப் போக சில்லுன்னு இருந்துச்சு. ஆனா, பயணத்தை முடிச்சிட்டு, கீழ இறங்கி வர வர அனல் தாங்கல. யோசிச்சிப் பார்த்தா, மலை, சமதள நிலப்பரப்பில் இருந்து உயரமா இருக்கு. அப்போ, சூரியனுக்கு அருகில்தான மலை உச்சி இருக்கும். அப்புறம் ஏன், மலை உச்சி சூடா இல்லாமல், குளிருது?
நம்ம பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம், 150 மில்லியன் கிலோமீட்டர். உலகின் மிக உயர்ந்தச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் மேல நாம நின்றாலும், சூரியனுக்கு சுமார் 9 கிலோ மீட்டர் தான் அருகில் போக முடியும். ஏனெனில், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 8849 மீட்டர் தான். இந்த சின்ன தூரத்தால… ஆமா, சின்ன தூரம் தான், 150 மில்லியன் கிலோ மீட்டரை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 9 கிலோ மீட்டர் ரொம்பச் சின்ன தூரம் தான்! அதனால, இந்த சின்ன தூரத்தால, சூரியனின் வெப்பத்தில், பெரிய வித்தியாசம் இருக்காது.
ஆனால், ஏன் மலை உச்சியில் குளுருது? வாங்க, அதைப் பத்தி பாக்கலாம்.
நீங்க ஏதோ ஒரு இடத்தில நின்றுகொண்டு இருக்கிங்க, உங்க தலைக்கு மேல, ஒரு உயர்ர்ர்ர்ர்ரமான பெட்டி ஒன்று இருக்குனு வச்சிப்போம். அந்தப் பெட்டி நிறைய வளியில் இருக்குற காற்று மூலக்கூறுகள் இருக்கு. இந்த காற்று மூலக்கூறுகளுக்கு எடை இருக்கும். இவை அழுத்தத்தை ஏற்படுத்தும். இதற்கு வளிமண்டல அழுத்தம் என்று சொல்லுவோம். இதை நாம உணராம இருக்குறதுக்குக் காரணம், நம்ம உடல், இந்த அழுத்தத்திற்குப் பழகிடுச்சு. காற்று மூலக்கூறுகளின் எடை, நீங்க சமவெளியில் இருக்கும் போது அதிகமா இருக்கும். இதற்குக் காரணம், புவியீர்ப்பு விசையால் காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கை, சமவெளிப் பரப்பில் அதிகமாக இருக்கும். புவியீர்ப்பு விசை, காற்று மூலக்கூறுகளை சமவெளிக்கு இழுத்து விடும். அதனால், கீஇருக்கும். அதனால் தான், சமவெளியில் அனல் அதிகமா இருக்கு. அதுவே, சமவெளியில் இருந்து உயரத்துக்குச் செல்லச் செல்ல, காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறையும். அதனோடு, வளிமண்டல அழுத்தமும் குறைய ஆரம்பிக்கும். வளிமண்டல அழுத்தம் குறையக் குறைய வெப்ப நிலை குறைய ஆரம்பிக்கும். அதனால தான், மலைக்கு மேல போகும் போது, வெப்ப நிலை குறைந்து, குளிர்ச்சியா இருக்கு.