துணுக்குச் சீட்டு – 9 : ‘அணு’வா? ‘செல்’லா?
வேதியியல் வகுப்புல இருக்கும் போது, இந்தப் பேரண்டத்தில் இருக்கும் எல்லாமே அணுவினால் ஆனதுனு எங்க வேதியியல் ஆசிரியை சொன்னாங்க. அப்படியே, உயிரியல் வகுப்புல, நம்ம உடம்பு செல்களால் ஆனதுன்னு சொன்னாங்க. அப்போ நம்ம உடம்பு அணுவினால் ஆனதா இல்லை, செல்களால் ஆனதா? இந்தக் கேள்வி உங்களுக்கும் இருக்குதானே!
அண்டத்தில் இருக்கும் எல்லாப் பொருள்களிலும் வேதியியல் இருக்கு. இந்த வேதியியல் பொருள்களை உடைத்துக்கொண்டே வந்தால், ஒரு கட்டத்திற்கு மேல் இதை உடைக்கவே முடியாது என்கிற ஒரு நி¬கீல வரும். அப்படி உடைக்கவே முடியாது என்கிற நிலையில் இருக்கும் பொருள் தான் அணு. எடுத்துக் காட்டுக்கு சோடியம், கார்பன், நீர்வளி (Hydrogen) போன்றவற்றைச் சொல்லலாம்.
நம்ம உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளும், செல்களால் ஆனவைதான். இந்தச் செல்களுக்குள், கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு (Lipid) போன்றவை இருக்கும். இந்தப் பொருள்களில் எல்லாம் அணு இருக்காதா? நிச்சயமா இருக்கும். இன்னும் சொல்லப்போனால், இந்த கார்போஹைடிரேட், புரதம் மற்றும் செல்லில் உள்ள இதரப் பொருள்கள் எல்லாமே அணுக்களால் ஆனவை தான். எடுத்துக்காட்டாக கார்போஹைட்ரேட் என்பது கார்பன், நீர்வளி, உயிர்வளி (Oxygen) ஆகியவற்றால் ஆனது. இதுபோல் தான் செல்களில் இருக்கும் மற்ற பொருட்களும், பல்வேறு அணுக்களால் ஆனவை.
பல்வேறு அணுக்கள் சேர்ந்து செல்லில் உள்ள மூலக்கூறுகள் உருவாகுது. இந்த மூலக்கூறுகள் எல்லாம் சேர்ந்து செல் உருவாகுது. இந்தச் செல்கள் எல்லாம் சேர்ந்து உடல் உறுப்புகள் உருவாகுது. உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து தான் நம்ம முழு… உடல் இருக்கு.
இப்போ நீங்களே சொல்லுங்க, நம்ம உடல் செல்களால் ஆனதா? இல்லை, அணுக்களால் ஆனதா?