உலகு சூழ் ஆழி
பசுபிக் பெருங்கடல் 1 உலகில் மிகப் பெரியது பசுபிக் பெருங்கடல். பூமியின் 3இல் 1 பகுதியில் பரந்து விரிந்துள்ளது. அது வடக்கே ஆர்க்டிக் துருவத்திலிருந்து தெற்கே அண்டார்டிகா வரை நீண்டுள்ளது. அப்பெருங்கடல் ஆசியா, ஆஸ்திரேலியா, வட, தென் அமெரிக்கா கண்டங்களுக்கிடையே விரிந்துள்ளது. இப்பெருங்கடலில் 20,000 எரிமலைத் தீவுகளும், பவளத் தீவுகளும் உள்ளன. மிக ஆழமான பெருங்கடல் இதுவே. மரியானா (Mariana) என்ற நீண்ட ஒடுக்கமான பள்ளத்தின் ஆழம் 11,033 மீட்டர் (36,197 அடி). இப்பெருங்கடலின் வழியே மிக முக்கியமான வாணிபம் நடைபெறுகிறது. ஏனெனில், இதன் கரையில் உலகத்தின் செல்வம் மிக்க நாடுகள் பல உள்ளன. பசுபிக் என்றால் அமைதி என்று பொருள். ஆனால், இப்பெருங்கடலில் வலிமைமிக்க நீரோட்டங்கள் செல்கின்றன. வானிலை மாற்றத்திற்கு அவை பெரும் காரணமாக உள்ளன.
பசுபிக் பெருங்கடல் – சில உண்மைகள்:-
பரப்பு – 16,52,41,000 சதுர கி.மீ. (6,38,00,000 சதுர மைல்கள்)
சராசரி ஆழம் – 4,200 மீ (13,800 அடி)
தீவுகளின் எண்ணிக்கை – 20,000 – 30,000
உயரமான மலை – ஹவாய் தீவில் உள்ள மௌனாயாகி (Mauna kea)
உயரம்
10,205 மீ (27,605 அடி)
பசுபிக்கில் உள்ள தீவுகள்:-
பசுபிக் பெருங்கடலில் பல பெரிய தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன. தென் பசுபிக்கில் நியுகினியா (New guinea) நியூகாலிடோனியா (New caledonia), சொசைட்டி தீவுகள் (Society Islands), சாலோமன் தீவுகள் (Salomon Islands) முதலிய தீவுகள் இருக்கின்றன. வட பசுபிக்கில் ஹவையா (Hawaiiah) தீவுகள் , பிலிப்பைன் தீவுகள், ஜப்பான், மேரியானா முதலிய தீவுகள் இருக்கின்றன.
பவளத் தீவுகள்:- (Coral Islands)
வெப்பம் மிகுந்த தெற்கு பசுபிக் பெருங்கடல் பவளப் பாறைகள் உண்டாக உதவுகிறது. ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்கள் பவளப் பாறைகளாலும், பவளப் படிவங்களாலும் ஆனவை. பெரும்பாலான பவளத் தீவுகள் அளவில் சிறியன.
ஹவாய் தீவுகள்: (Hawaii Islands)
இத்தீவுக் கூட்டங்கள் அமெரிக்க அய்க்கிய நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டவை. எரிமலைகளால் புதிய தீவுகள் உண்டாகின்றன. ஹவாயில் உள்ள 2 எரிமலைகள் எரிமலைக் குழம்பை (Lava) காற்றில் கலந்து பீச்சி அடிக்கின்றன.
இராணுவத் தலங்கள்:-
பசுபிக்கில் உள்ள பல தீவுகள் அய்க்கிய, அமெரிக்க நாடுகளின் தலங்களாக உள்ளன. ஹவாய் தீவில் உள்ள குவாம் (Guam) என்ற இடத்தில் கடற்படைத் தளமும், வேக் (wake) என்ற இடத்தில் விமானப்படைத் தளமும் உள்ளன. ஜான்ஸ்டன் (Johnston) என்ற பகுதி இரசாயன ஆயுதங்களையும், நச்சு சார்ந்த வாயு நிறைந்த ஆயுதங்களையும் வைத்திருக்க உதவுகின்றது.
பறவைகள் சரணாலயம்:-
மக்கள் குடியேறா சில பேக்கர் (Baker), ஹௌலாண்ட் (Howland), ஜார்விஸ் (Jarvis)ஆகிய தீவுகளில் இலட்சக்கணக்கான கடல் பறவைகள் வாழ்கின்றன.