கதைகேளு கணக்குப் போடு..
போக்குவரத்து வசதியில்லாத குக்கிராமத்திலிருந்து செழியனும், இனியனும் அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்றனர். நடந்து செல்லும் வழியில் பசித்தால் சாப்பிட இட்லிகளைப் பொட்டலமாகக் கட்டி எடுத்துச் சென்றனர். செழியனிடம் 3 இட்லிகள் கொண்ட பொட்டலங்கள் 3 இருந்தன. இனியன் 3 இட்லிகளுடன் 2 பொட்டலங்கள் வைத்திருந்தான். இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.
நடந்து சென்ற களைப்பில் பசி எடுத்ததும் மர நிழலைத் தேடி அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். அப்போது, அந்த வழியே இன்னொரு நபர் வந்தார். அவரைப் பார்த்த செழியனும், இனியனும் தங்களுடன் அமர்ந்து சாப்பிடும்படிக் கூறினர்.
வந்தவர் பசியுடன் இருந்ததால், சரி என்று சொல்லிச் சாப்பிட்டார். இருவரிடமும் இருந்த இட்லிகளைச் சமமாகப் பங்கிட்டுச் சாப்பிட்டனர். நன்றி சொல்லிய மூன்றாம் நபர், தன் பையிலிருந்து எடுத்து 50 ரூபாய் கொடுத்துச் சென்றார். பணத்தை வாங்கிய செழியன், 2 பொட்டலங்கள் உன்னுடையது. எனவே, உனக்கு 20 ரூபாய், எனக்கு 30 ரூபாய் என்று பிரித்துக் கொடுத்தார்.
மூவரும் சமமாகப் பங்கிட்டுச் சாப்பிட்டோம். எனவே, பணமும் சமமாக வரவேண்டும். எனக்கு 25 ரூபாய் வேண்டும் என்றான் இனியன். இதனைக் கேட்ட செழியன், தரமுடியாது என்றான். இருவரும் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரிடம் முறையிட்டனர். தலைவர் இருவருக்கும் புரியும்படி விளக்கி, பணத்தைப் பங்கிட்டுக் கொடுத்தார்.
செழியன் பெற்ற பணம் எவ்வளவு?
இனியன் பெற்ற பணம் எவ்வளவு? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
விடை: இன்னொரு பக்கம்