பரிசு வேண்டுமா? : குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று ……………………கமிஷன் அறிக்கையை அமல்படுத்தினார் (4)
3. வானத்தை ஆய்வு செய்ய தொலை நோக்கியை உருவாக்கிய வானியலாளர்
…………………………….. லியோ. (2)
5. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கல்கியின் நாவல் …………………………… (4)
7. சனாதன காலத்தில் கல்வி கற்றுக்கொடுக்க குரு கேட்பார் குரு………………………….. (4)
9. …………………………சுந்தரம். நாகேஷ் நடித்த திரைப்படம் (4)
16. இல்லை. இல்லவே இல்லை…………………….. .(4)
18. அமெரிக்கப் பகுத்தறிவாளர், பேச்சாளர்…………………………..1833 ஆகஸ்ட் 11 பிறந்தார். (6)
வலமிருந்து இடம்:
8. நாட்டுப்புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிக்குமுன் செய்துகொள்வார்கள் ஒ…………………. (3)
11. நள்ளிரவு. ந………………….சி (2)
13. ஒரு ……………………………. சோற்றுக்கு ஒரு சோறு பதம்(2)
14. நாட்டுப்புற ஆய்வாளர் வானமாமலை சுருக்கமாக …………………………… இப்படி அழைக்கப் படுவார் (2)
மேலிருந்து கீழ்:
1. கடவுளை மற…………………… என்றார் தந்தை பெரியார் (6)
2. நடிகர்களுக்கு மேக்கப் செய்ய ……………………………… பாய்களை வைத்திருப்பார்கள் (4)
3. தமிழர்களுக்காக உழைத்து ஆகஸ்ட் 7 அன்று மறைந்தார் நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் …………………………………. (4)
4. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் அய். ………………….னி அவர்கள் (2)
6. குற்றங்களைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவுகிறது …………………….. கிரைம் காவல்துறை. (3)
10. டேக்ஸ். தமிழில்………………… (2)
12. நடிகர் திலகம் ……………………………. ஜி கணேசன் (2)
14. அமெரிக்கா ஜப்பானின் ……………………….கி நகரத்தின்மீது அணுகுண்டு வீசிய நாள் ஆகஸ்ட் 9 (3)
15. மாணவர்கள் பயிலுமிடம்………………….க்கூடம்(3)
17. “திரை க…………………ஓடியும் திரவியம் தேடு” (2)
கீழிருந்து மேல்:
13. …………………….டு உழைத்தால் பலன் நிச்சயம் (4)
19. அழுக்கு வேறு சொல்…………………. (2).