எங்கள் பள்ளிக்கூடம்
எங்கள் பள்ளி உயர்வாகும்
இதயம் போலச் செயல்படுமே
மங்காப் புகழின் உறைவிடமே
மகிழ்வாய்ப் பயிலும் அறிவகமே!
விரும்பி நாங்கள் பயில்கின்றோம்
வெற்றிப் புகழைப் பெற்றிடுவோம்
கருத்தாய் ஊன்றிக் கற்கின்றோம்
கற்று உலகை அறிகின்றோம்!
கல்விப் பெருமை உலகறிய
கற்பவர் வாழ்வில் பெருமையுற
சொல்லித் தருவார் கசடறவே
சிறுவர் சிறுமி உயர்ந்திடவே!
கல்விப் பணியைச் செய்வோரால்
கதிராய் அறிவுச் சுடர்வீசும்;
அள்ளித் தருவார் அறிவுரைகள்
அகிலம் போற்றிப் புகழ்ந்திடவே!
தேர்ந்த கல்வி தருகின்றார்
திசைகள் தோறும் சிறப்புறவே!
ஊரின் நடுவில் அமைந்ததுவே
உள்ளம் கவர்ந்த எம்பள்ளி!! <
– ஆ.சி. மாரியப்பன்,
புதுக்கோட்டை