தகைசால் தமிழர் தலைவர் வாழியவே !
தகைசால் தமிழர் வீரமணி
தரணி போற்றும் அறிவுமணி
தொகையாய் ஆரியர் சூழ்ச்சியினை
தூள்தூள் ஆக்கும் வெற்றிமணி
மிகையாய்ப் பெரியார் சிந்தனையை
மேதினி எங்கும் பரப்பும்மணி
வகையாய்ப் புதுச்செயற் திட்டங்கள்
வார்த்து அளிக்கும் ஆய்வுமணி
பெரியார் பிஞ்சுகள் நாமெல்லாம்
பீடுடன் நமதரும் தாத்தாவை
நெறியாய்த் தொடர்வோம்; வாழ்த்திடுவோம்
நீடு வாழிய தாத்தாவே!
அரிய பண்புகள் மிக்கவராம்
அருந்தமிழ் முதல்வர் ஸ்டாலின்தான்
உரிய விருதைத் தலைவர்க்கு
உவந்து அளித்தார் வாழியவே!
– டாக்டர் பெரு.மதியழகன்