ஓவியராகலாம் வாங்க! : மிக்ஸி வரைவோமா ?
பி. இளங்கோ
குழந்தைகளே! இந்த இதழில் நாம் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம் என்றால், பசிக்கும் வேளையிற் சமையலறையில் இருந்து வரும் கிர்ர்ர்ர்… ஓசை நம் மனதின் சந்தோஷ சங்கீதத்தை – அந்த கிர்ர்ர் சத்தத்தை எழுப்பும் மிக்ஸியைதான் நாம் வரையப் போகிறோம்.
இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் A, D, O, L மற்றும் V.
அறிவியல் கண்டுபிடிப்புகளிலேயே பெண் களுக்கு அதுவும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கண்டுபிடிப்பு இந்த மிக்ஸியைக் கண்டுபிடித்ததுதாங்க.
இதைப் பெண்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் பயன்படுத்த வேண்டும். சமையல் செய்யவேண்டும். 1908-இல் ஹர்பெர்ட் ஜான்சன் (Herbert Johnson) என்பவர் தன் மனைவி படும் சிரமங்களைக் குறைப்பதற்காக இந்த மிக்ஸியைக் கண்டுபிடித்தார்.