சிறார் பாடல் : சோளக்கொல்லைப் பொம்மை!
அந்தப் பக்கம்
இந்தப் பக்கம்
திரும்ப முடியல.
நெருங்கி வந்து
உங்களோட
பழக வழியில்ல.
வெயிலும் வருது
பனியும் வருது
மழையில் நனையுறேன்.
இரவும் வருது
பகலும் வருது
எங்கே படுக்கிறேன்?
நாளுக்கொரு
சட்டத்துணி
நானும் போடல.
பசியில்லாத
வேலைக்காரன்
கூலி கேட்கல.
கைகள் விரித்து
அழைப்பு விடுத்து
நானும் நிற்கிறேன்.
அணைக்க உங்க
அன்பு மனம்
வேண்டித் தவிக்கிறேன்.
– நீதிமணி,
வேலூர்