பிஞ்சுகள் பக்கம்
அனுபவம் புதுமை
இந்தியாவின் பெரிய சுரங்கப்பாதை
இந்தியாவிலேயே மிகப்பெரிய 4 சக்கர வாகனங்கள் செல்லும் போக்குவரத்து சுரங்கப் பாதை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. இது ஜம்முவிலிருந்து சிறீநகர் செல்லும் முதன்மைச் சாலை எச்.என்.1இல் அமைந்துள் ளது. சுரங்கம் தன் முன்னால் பனிஹால் என்ற ஊரையும் தன் பின்னால் காசிகுண்ட் என்ற ஊரையும் கொண்டுள்ளது. சிறீநகர் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் கார்கில் பயணிகள் அனைவரும் இந்தச் சுரங்கத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதன் நீளம் 2,758 மீட்டர். இதனுள் 5 அவசர வெளியேறும் வழிகள் (Emergency Exit), 19 அவசர தொலைப்பேசிகள் உள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அகலப் பாதைகளும் உள்ளன. சுரங்கத்தின் மேல் இராணுவக் குடியிருப்பு முகாம்கள் (Army Camp Stayed) இருக்கின்றன. பொதுவாக, 50 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் சரியாக 15 நிமிடங்களில் சுரங்கத்தைக் கடந்துவிடலாம். சுரங்கத்தின் பெயர் ஜவகர் [JAWAHAR TUNNEL].
(சொந்த அனுபவம்) It’s my own experience.
பி.மணிமேகலை, இளநிலை மருந்தியல் முதலாம் ஆண்டு, பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி-21.
அறிந்து கொள்வோம்
மலை உருவாகும் விதம்
மலை என்பது அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள நிலப் பகுதியிலிருந்து உயர்ந்துள்ள ஒரு நிலமாகும். எரிமலை வெடிப்பினாலோ அல்லது அரிப்புச் செயல்களாலோ அல்லது புவியின் உட்புறம் தோற்றுவிக்கப்படும் நிலவியல் விசையினாலோ மலைகள் உருவாகின்றன.
க.கார்த்திகா, 8ஆம் வகுப்பு அ பிரிவு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை
கிழமைகளுக்குப் பெயர் வந்தது எப்படி?
ஒரு வாரத்திற்கு 7 நாள்கள் என்ற முறையை எகிப்தியர்கள் பின்பற்றினர். நாள்களுக்கு 5 கிரகங்களின் பெயர்களைச் சூட்டினர். ரோமானியர்கள் எகிப்தியர்கள் வைத்த பெயர்களைப் பின்பற்றினர்.
சூரியனின் பெயர் ஞாயிறு எனப்பட்டது. சந்திரனின் பெயர் திங்கள் என்றாயிற்று. மார்ஸ் அல்லது டியூ ரோமானியர்களின் போர்த் தெய்வமாகும். அந்தப் பெயர் செவ்வாய் எனப்பட்டது. மெர்குரி என்பதற்குப் பதிலாக மற்றோர் தெய்வத்தின் பெயர் (ஓடன்) புதன் என்றாயிற்று.
தர் என்பது ரோமானியர்களின் இடித் தெய்வப் பெயர். இது தர்ஸ்டே – வியாழன் ஆனது. பரீக் என்பது ரோமானியர்களின் மற்றொரு தெய்வத்தின் மனைவியின் பெயர். அது ஃபிரைடே – வெள்ளி எனப்பட்டது. சனிக் கிரகப் பெயர் சனி என்று பெயரிடப்பட்டது.
சூரியன் உதயமான நேரத்திற்கும் மறையும் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் பகலாகக் கணக்கிடப்பட்டது. ஒரு நள்ளிரவு முதல் அடுத்த நள்ளிரவு வரையுள்ள காலத்தை ஒரு நாளாகக் கொண்டனர் ரோமானியர்கள். அந்த முறையைத்தான் இன்றைய நாடுகள் பின்பற்றி வருகின்றன.
கு.மீனா, விளாத்திகுளம்